எறும்புகளுக்கு பயப்படுவது அரிய வகை நோயா? இளம்பெண்ணின் உயிரை பறித்த சோகம்
பொதுவாக இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றின் மீது பயம் இருக்கும். அது சிலருக்கு உச்சக்கட்டத்தை தொடும் பொழுது அவர்களால் அந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் கடும் அவஸ்தைகளை அனுபவிப்பார்கள்.
அந்த வகையில், தெலங்கானாவில் ஒரு பெண்ணொருவர் கணவருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தேடி பார்த்த பொழுது, அதிர்ச்சிக்கரமான உண்மையொன்று வெளிவந்துள்ளது.
அதாவது குறித்த பெண், சிறுவயது முதல் மிர்மேகோபோபியாவால் (Myrmecophobia) என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நோயானது எறும்புகள் மீதான பயத்தினால் ஏற்படுகிறது. இவ்வளவு ஆபத்தான மிர்மேகோபோபியா பற்றி பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது.
கீழ்வரும் பதிவில் மிர்மேகோபோபியா பற்றிய முழு விவரங்களையும் அதற்கான தீர்வுகளையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

மிர்மேகோபோபியா
மிர்மேகோபோபியா நோயானாது எறும்புகள் மீதுள்ள பயத்தினால் உருவாகும் நோயாகும். சிலர் சிலந்தி என்றாலே பயத்தில் நடுங்குவார்கள். இது போன்ற பூச்சிகள் உணவிற்குள் சென்று உணவையே பழுதாக்கும் அளவுக்கு வீரியம் கொண்டுள்ளது.
காரணம்
சிலர் எறும்பு கடியால் கடும் அவஸ்தை அனுபவித்திருப்பார்கள். இதுவே காலப்போக்கில் ஒருவித பயத்தை உண்டு பண்ணியிருக்கும். எறும்பு கடித்தால் ல் தொண்டை வீங்கி, பாதிக்கப்பட்டவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

அறிகுறிகள்
- மிர்மேகோபோபியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எறும்புகளை பார்த்தாலே பயம் கொள்வார்கள்.
- எறும்புகள் போன்ற பூச்சிகளை நினைத்தால் நடுக்கம் கொள்வார்கள்.
- அவர்களின் உடல் பயத்தில் உதற ஆரம்பிக்கும். சாதாரணமாக ஒரு எறும்பை பார்த்தால் பயங்கரமாக உணர்வார்கள்.
- ஃபோபிக் நபர்கள் எறும்புகளை பார்க்கும் மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
- எறும்புகளை பார்த்தால் கட்டுப்படுத்த முடியாத அழுகை வரலாம். சிலர் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வார்கள். இவர்களுக்கும் எறும்புகளை பற்றிய பயம் இருக்கலாம்.

- கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுதல் அல்லது அவர்களின் வீடுகள் மற்றும் முற்றங்களில் எறும்புகளை தடுக்கும் பூச்சிக்கொல்லிகளை போட்டு வைப்பார்கள்.
சிகிச்சை
மிர்மேகோபோபியாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி அவசியம் தேவை.
சிகிச்சை/ஆலோசனை அமர்வுகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். லேசான அளவு மருந்து எடுத்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |