சன்டே ஸ்பெஷல்: ஊரே மணக்கும் மட்டன் ஈரல் குழம்பு செய்ய தெரியுமா?
ஊரே மணமணக்கும் மட்டன் ஈரல் குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.
மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச் துண்டு
* வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* நாட்டு தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
பிற பொருட்கள்
* மட்டன் ஈரல் - 500 கிராம்
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மட்டன் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
குழம்பு எப்படி செய்றாங்க தெரியுமா?
முதலில் ஒரு வாணலியை எடுத்து அதில் எண்ணெய், சோம்பு, கிராம்பு, பட்டை, வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின்னர் அதில் மசாலா பொருட்கள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதங்கி விட வேண்டும். அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
லேசாக ஆற விட்டு பின்னர் மிக்ஸி சாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்த சில நிமிடங்கள் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
வதங்கி கொண்டிருக்கும் போது மஞ்சள் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மட்டன் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதங்க விடவும். வாசம் வரும் போது மட்டன் ஈரலைக் கழுவி, குக்கரில் போட்டு, நன்கு கிளறி விட வேண்டும்.
அதில் அரைத்து வைத்து மசாலா சேர்த்து சரியாக 2 விசிலுக்கு விட்டு, வெந்ததும் குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
குக்கரிலிருந்து இறக்கும் முன்னர் தேங்காய் பால் ஒரு கப் விட்டு 3 விநாடிகள் அடுப்பில் வைத்து இறக்கினால் சுவையான மட்டன் ஈரல் குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |