வெறும் வெங்காயம், தக்காளி போதும்! நாவூறும் ருசியான தொக்கு செய்யலாம்
வெறும் வெங்காயம் மற்றும் தக்காளியை கொண்டு சுவையான தக்காளி தொக்கு செய்யலாம், இது சப்பாத்திக்கு ஏற்ற அருமையான சைடு டிஷ்.
சப்பாத்திக்கு மட்டுமல்லாது பூரி, சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு ஒருமுறை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி, நன்கு வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து ஒருமுறை கிளறி விட்டு, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கி, தொக்கில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கறிவேப்பிலையைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.