மதிய உணவை கையில் எடுத்து வந்த விஜய் - குவியும் பாராட்டுக்கள்
முதலமைச்சர் விஜய் அவருடைய மதிய உணவை கையில் எடுத்து வந்து சட்டசபையில் சாப்பிட்டுள்ளார். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகின்றது.

விஜய்
தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தான் மதலமைச்சர் வரவேண்டி இருந்தது. ஆனால் காலை 8.48 மணிக்கே முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார்.
மறுநாள் காலை 9.30 மணிக்கு சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் விஜய் வருகை தந்நதிருந்தார்.

12-ந்தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் சட்டசபையில் நடைபெற்றது.
அடுத்த நாள் (13-ந்தேதி) காலை 9.30 மணிக்கு சட்டசபையில், அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் தனது வழக்கமான பணியை செய்ய முதலமைச்சர் தன்னுடைய தலமை செயலகம் வந்துள்ளார்.

அரசு ஊழியர் போல காலை 9.55 மணிகே தலைமைச் செயலகம் வருகை தந்து மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
மதிய உணவையும் காலையிலேயே கையோடு கொண்டுவந்த அவர், தலைமைச் செயலகத்திலேயே தனது அறையில் உணவையும் சாப்பிட்டுள்ளார்.
பின்னர், மாலை 4 மணிக்கு, தனது பணிகளை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் விஜய் வீடு திரும்பினார். விஜய் இப்படி அரச ஊழியர்கள் போல நடந்துகொண்டதற்கு அங்கிருந்த ஊழியர்களும் காவல்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |