காடு போல் கன்னங்களில் தாடி வளர வேண்டுமா? இத கொஞ்சமாக தடவுங்க
பொதுவாக ஆண்களுக்கு மீசை மற்றும் தாடி இருந்தால் தான் அழகு என்பார்கள்.
சிறுவயதிலிருந்து இளமை வரும் போது தாடி இல்லாதவர்களை சிலர் ஏளனமாக பேசுவார்கள். சில ஆண்களுக்கு மிக எளிதாகவே அதாவது இயற்கையாகவே எளிதில் வளர்ந்து விடும்.
மாறாக சில ஹார்மோன்கள் கோளாறு காரணமாக இது போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கு ஏற்படுகின்றன. இவர்கள் என்ன தான் முயற்சிகள் செய்தாலும் சை, தாடி என்பது வளரவே வளராது.
எனவே மீசை மற்றும் தாடி எனக்கு வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.
அந்த வகையில் எப்படி இலகுவில் மீசை தாடியை கடினமாக வளர்ப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
1. ஆமணக்கு எண்ணெய்
தாடி, மீசை குறைவாக இருப்பவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
பின்பு அந்த தண்ணீரை முகத்தில் ஆவிபிடிக்கவும். பின்னர் முகத்தை துடைத்து விட்டு ஆமணக்கு எண்ணெயை தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது தாடி, மீசை வளர ஆரம்பித்து விடும்.
2. கருஞ்சீரகம் எண்ணெய்
படுக்கைக்கு செல்லும் முன்னர் முகத்தை சுத்தம் செய்து விட்டு எங்கு முடி தேவைப்படுகின்றதோ அங்கு கருஞ்சீரக எண்ணெயை போட்டு மசாஜ் செய்யவும்.
இப்படி செய்தால் ஒரு மாதத்தில் நிச்சயமான சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
3. விளக்கெண்ணெய்
முடி வளர்ச்சியை துண்டும் எண்ணெய்களில் இது முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் விளக்கெண்ணெயை தடவி மறுநாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
தினமும் மறக்காமல் செய்து வந்தால் நீங்களும் மீசையை முறுக்கிக் கொண்டு ஊருக்குள் சுற்றிலாம்.
முக்கிய குறிப்பு
ஒவ்வாமை இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.