இரண்டு முறை உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தேன்! இசையமைப்பாளர் உருக்கம்
தற்போது மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் 18 வயதில் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இசையமைப்பாளர் ரவி
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தான் "இரண்டு முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும்", இரண்டாவது முறை தனது இசையைக் கேட்ட ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும் மனம் திறந்து பேசினார்.
உலகம் முழுவதும் கேஜிஎஃப் படத்தின் வெற்றியை கொண்டாடியது. அந்த வெற்றி படத்தில் இசையமைத்தவர் தான் ரவி பஸ்ரூர். திரைப்படத்தின் கதைக்கு ஏற்ப அவருடைய இசை பட்டி தொட்டி எங்கும் அந்த திரைப்படத்திற்கு ஒரு புகைழை சேர்த்து கொடுத்தது.
ஒரு படத்தில் காட்சிகளுக்கு ஹைப் ஏற்ற முக்கிய காரணம் அதன் பின்னணி இசை. ரூ.1500 கோடி வசூலித்த படத்தின் வெற்றிக்கு இவரது இசை பிரதான காரணம்.

குறிப்பாக ‘தீரா தீரா வாள் வீசும் கரிகாலா’ பாடல் பரபரவென வேகத்துடன் மிரட்டும். அதன் இடையில் தாய் பாசத்தை சொல்லியிருக்கும். அந்த மெலோடியும், வரிகளும், ரசிகர்களை ஈர்த்தன.
இவை எல்லாவற்றிற்கும் சொந்தக்காரர் தான் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்.
இதன் பின்னர் தற்போது வெளியாகிய பிளாஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கால் பதித்துள்ளார் ரவி பஸ்ரூர்.

பேட்டி
இப்படி பிரபல பாடல்களை தந்த மிகப்பெரிய இசையமைப்பாளருக்குள்ளும் ஒரு வலி இருக்கிறது.
தெலுங்குத் திரைப்படமான 'கல்ட்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் பெசி இருந்தார். அப்போது “எனக்கு 25 ஆண்டுகால அனுபவம் உள்ளது. நான் எப்போதும் நல்ல மனிதர்களுக்கு நல்ல இசையை வழங்கவே முயற்சிக்கிறேன்.
18 வயதுக்குள் நான் 2 முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றேன். இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், 2 முறையும் நான் காப்பாற்றப்பட்டேன்.

2வது முறை என்னைக் காப்பாற்றியவர் எனது இசையைக் கேட்டு, எனக்கு ஒரு கீபோர்டு வாங்கிக் கொடுத்து, ரூ.35,000 பணமும் கொடுத்தார்.
என்னை மீட்டெடுத்த அந்த மனிதரின் பெயர்தான் 'ரவி'. அன்றிலிருந்துதான் நான் எனது பெயரை 'ரவி' என்று மாற்றிக் கொண்டேன்” என மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |