இசையும் என் வாழ்க்கையும் வேறு வேறு அல்ல: இசையமைப்பாளர் வித்யாசாகர்
தலைமுறைகள் தாண்டி பல நல்ல இசையை நமக்கு கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
அவர் தனது இசை வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்ட சில விடயங்கள்.
30 வருட இசைப்பயணம் எவ்வாறு உள்ளது?
மியூசிக் தான் என் லைஃப். இசையோடு என் வாழ்க்கை பிணைந்துள்ளதால் இசையும் வாழ்க்கையும் ஒன்றுதான். இத்தனை தலைமுறைகள் கடந்தும் மக்கள் என் இசையைக் கேட்பது எனக்கு மிகவும் சந்தோஷம்.
ரசிகர்களுக்கு புதுப்புது விடயங்களை தேடிக் கொடுப்பதற்கான தேடல் பற்றி கூறுங்கள்?
பாடப்படும் குரலிலோ அல்லது பாட்டின் அணுகுமுறையிலோ வரிகளிலோ என்றுமே ஒரு புதுமை இருக்க வேண்டும் என நான் விரும்புவேன். இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என என்னை நானே மெருகேற்றிக் கொள்வேன்.
90களில் பிறந்தவர்கள் உங்களுக்கு மிகப் பெரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கின்றீர்கள்?
இது கடவுள் கொடுத்தது. இசையின் பால் அவர்கள் மனம் இசைந்திருக்கிறது என்பது மிகப்பெரும் வரம் என்றே நான் சொல்வேன்.