முந்திரி சாப்பிட்டால் பக்கவிளைவு ஏற்படுமா? பலரும் அறியாத பகீர் உண்மை
முந்திரியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற சத்துக்கள் உள்ளன.
இவ்வளவு சத்துக்கள் உள்ளபோதும் முந்திரி சில சமயங்களில் அதிகமாக எடுத்து கொண்டால் ஆபத்தை விளைவிக்கலாம்.
அந்தவகையில் முந்திரியை எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
பக்கவிளைவு
அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.
அதிக அளவு முந்திரியை சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இவை அதிக அளவில் ஆக்சலேட்டை கொண்டுள்ளன. முந்திரியானது டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் என்கிற அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலங்கள் நமது உடல்களுக்கு சில நன்மைகளை செய்கிறது என்றாலும் சிலருக்கு இதனால் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிக்கு தலைவிதி மாறி அடிக்கும் ஜாக்பாட்
ஒரு நாளைக்கு எத்தனை முந்திரி சாப்பிட வேண்டும்?
தினசரி சரியான அளவில் நாம் முந்திரியை உண்பது முக்கியமாகும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 18 முந்திரிகளை உண்ணலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே தினமும் அதிகமாக முந்திரி உண்பவர்கள் அதைக் கட்டுப்படுத்துவது நல்லது.
நன்மை உண்டா?
இயற்கையாகவே உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் ஒரு விதை உணவாக முந்திரி உள்ளது.
முந்திரியை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புகளின் அளவை அதிகரிக்க முடியும்.
வாரத்திற்கு நான்கு முறைக்கு மேல் முந்திரிப் பருப்பை உண்பவர்களுக்கு இதய நோய்க்கான அபாயமானது 37 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு முந்திரி உதவுகிறது.
முந்திரிப் பருப்புகள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.