Mushroom Chukka: ஹோட்டல் சுவையில் காளான் சுக்கா... வெறும் 10 நிமித்தில் தயார்
காளான் சுக்கா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சைவப் பிரியர்களுக்கு அதிகம் பிடிக்கும் உணவுகளில் ஒன்று தான் காளான் ஆகும். அசைவ சுவையில் இருக்கும் இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
தற்போது ஹோட்டல் சுவையில் காளான் சுக்கா எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
image: sailajakitchen
தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம்
சீரகம் - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
தனியா - 1 1/2 ஸ்பூன்
பட்டை - 1
காய்ந்த மிளகாய் - 8
கடுகு - 1 ஸ்பூன்
பூண்டு - 1 1/2 ஸ்பூன் (இடித்தது)
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
புளி கரைசல் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
image: rumkisgoldenspoon
செய்முறை
காளான் சுக்கா செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சீரகம், வெந்தயம், மிளகு, தனியா, பட்டை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
காளானை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு அதில் இடித்த பூண்டையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு காளானை சேர்த்து வதக்கியதும், சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இதனுடன் புளி கரைசலையும் சேர்த்து கலந்த பின்பு, ஐந்து நிமிடம் கழித்து தயாரித்து வைத்திருக்கும் பொடியை அதன் மீது தூவி நன்கு கிளறி விடவும். தற்போது சுவையான காளான் சுக்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |