40 வயதை கடந்தும் திருமணத்தை வெறுத்து தள்ளிய நடிகைகள்
சினிமாவில் திருமணம் ஆகிவிட்டாலே நடிகைகளுக்கு மார்க்கெட் போய்விடும். சில நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவார்கள். ஆனால், நடிகர்கள் மட்டும் திருமணமானாலும் சரி, வயதானாலும் சரி இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவார்கள். சில நடிகைகள் காலம் கடந்தாலும் இன்னும் திருமணம் பந்தத்தில் இணையாமல் ஒதுங்கியே இருக்கிறார்கள்.
அந்த வகையில் திருமணமே செய்து கொள்ளாமல் இன்று வரை இருக்கும் டாப் நடிகைள் பற்றி பார்ப்போம் -
மும்தாஜ்
தமிழ் சினிமாவில், ‘மோனிஷா என் மோனாலிசா’ என்ற படம் அறிமுகமானவர்தான் நடிகை மும்தாஜ். இதனையடுத்து, பல படங்களில் ஒரு பாடலுக்கு நடமாடினார். தமிழ், இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியால் இன்றும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
தபு
தமிழில் ‘காதல் தேசம்’ படம் மூலம் அறிமுகமானார் நடிகை தபு. இப்படம் 90 கிட்ஸிற்கு பிடித்த படமாகும். தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடிகை தபு நடித்துள்ளார். தற்போது, 52 வயதாகும் தபு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிகை தபு நடிகர் ஒருவரை காதலித்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததால், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.
கவுசல்யா
தமிழில் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கவுசல்யா. இதனையடுத்து, விஜய், விஜயகாந்த், முரளி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் இவர் நடித்துள்ளார். இவர் ஆன்மீகத்தில் இறங்கயுள்ளதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஷோபனா
‘எனக்குள் ஒருவன்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஷோபனா. இது நம்ம ஆளு, சிவா, என்கிட்ட மோதாதே, தளபதி, துறைமுகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து, 16 வருடங்களுக்கு பிறகு சிம்புவின் ‘போடா போடி’ படத்தில் ரீ-என்டரி கொடுத்தார். தற்போது இவருக்கு 53 வயதாகிறது. இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ஆனால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
நக்மா
தமிழில் ‘காதலன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நக்மா. இதனையடுத்து 2-வது படத்தில் ரஜினியுடன் நடித்ததால் முன்னணி நடிகையாக மாறினார். தற்போது இவருக்கு 48 வயதாகிறது. ஆனால், இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை. தங்கை ஜோதிகாவின் குழந்தைகளை இவர் கவனித்து வருகிறார்.