முகேஷ் அம்பானிக்கே இத்தனை கோடிகள் கடன் இருக்கா? மிரள வைத்த அறிக்கை
முகேஷ் அம்பானியின் கடன் தொகை தொடர்பாக வருடாந்த அறிக்கையில் தகவல் வெளியாக்கி உள்ளது.
முகேஷ் அம்பானியின் கடன்
முகேஷ் அம்பானியின் Reliance Industries நிறுவனம் கடுமையான சிக்கலில் மாட்டியுள்ளது. என்னதான் சிக்கலாக இருந்தாலும் இந்த கடன் சுமையை குறைக்க வலுவான லாபம் தேவைப்படுகிறது.
இந்த Reliance Industries நிறுவனம் 2024-25 நிதியாண்டுக்கான தனது வருடாந்திர அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி 2024 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த கடன் சுமார் ரூ.3.47 லட்சம் கோடி என்றும் நிகர கடன் ரூ.1.17 லட்சம் கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நிறுவனத்திற்கு இருக்கும் மொத்த கடன் ரூ 3.24 லட்சம் கோடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு Reliance Industries பெரும் ஆதாயம் ஈட்டி வந்துள்ளது.
ஆனாலும் கடன் சுமை குறையவில்லை. இந்த நிறுவனத்தை விரிவுபடுத்த இதன் நிர்வாகம் அதிகப்படியான கடனை வாங்கியுள்ளது.
இங்கு ஒரு வலுவான நிதி நிலையைப் பேணவும் வர்த்தகத்தை வளர்க்க பெரிய முதலீடுகளைச் செய்து வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த 2025 நிதியாண்டின்படி Reliance Industries நிறுவனம் ரூ.131,107 கோடி மூலதனச் செலவைச் செய்துள்ளது. இது 2023-24 நிதியாண்டில் ரூ.131,769 கோடியாக இருந்தது.
லாபம்
ஆண்டு அறிக்கைகளை வைத்து பார்த்தால் 2025 நிதியாண்டின் முதலீடுகளில் பெரும்பாலானவை புதிய O2C திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றே தெரிய வருகிறது.
O2C என்பது எண்ணெய் முதல் ரசாயனம் என்ற திட்டமாகும். இதில் கச்சா எண்ணெயை ரசாயனமாக மாற்றுவதாகும். Reliance Industries வருமானம் ரூ.557,163 கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் வருவாய் ரூ.574,956 கோடியுடன் ஒப்பிடும்போது 3.1% குறைவு.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |