முகேஷ் அம்பானி வீட்டில் 600 பணியாளர்... எத்தனை லட்சம் சம்பளம் தெரியுமா?
இந்தியாவில் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி
இந்தியாவில் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, இவரது மனைவி நீதா அம்பானி மும்பையில் விலையுயர்ந்த பள்ளியான திருபாய் அம்பானி பள்ளியின் நிறுவனர் ஆவார்.
ஆண்டிலியா என்று அழைக்கப்படும் அம்பானியின் வீடு உலகின் மிக விலை உயர்ந்த வீடுகளில் ஒன்றாக இருக்கின்றது. 27 மாடி கட்டிடம் கொண்ட இந்த வீட்டில் முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆனந்த் அம்பானி, ஷ்லோகா அம்பானி வசித்து வருகின்றார். இந்த வீட்டின் மதிப்பு ரூ.15,000 கோடியாம்.
இந்த ஆடம்பர வீட்டில் சமையல், பராமரிப்பு, கார் ஓட்டுனர் என 600 பேர் வேலை செய்துவரும் நிலையில், இவர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்குகின்றனர்.
ஆம் இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன், தங்கும் இடம், உணவும் கொடுக்கப்படுவதுடன், காப்பீடு மற்றும் கல்வி உதவித்தொகையையும் வழங்குகின்றாராம்.
இவர்களின் ஒரு மாத சம்பளம் 2 லட்சம் என்றும் இவர்களின் பிள்ளைகள் சிலர் வெளிநாட்டில் படிப்பதாகவும் கூறப்படுகின்றது.
வேலைக்கு என்ன தகுதி?
அம்பானி குடும்பத்திற்கு 500 வாகனங்கள் இருப்பதாகவும், இங்கு வேலைக்கு சேர்பவர்களுக்கு கடுமையான பயிற்சிக்கு பின்பே சேர்ப்பார்களாம்.
இங்கு ஓட்டுனரின் வேலைக்கு நிறுவனத்தினால் கடுமையான சோதனை செய்யப்படும்... அதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே இங்கு செல்ல முடியும்.
இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதற்கு நம்பகமான நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு, நன்கு படித்தவர்களாகவும், பொது அறிவு, ஹொட்டல் மேனேஜ்மெண்ட் தொடர்பான தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |