அம்பானி வீட்டில் வேலை செய்ய வேண்டுமா? அப்போ உங்களுக்கு இந்த தகுதிகள் இருக்கணுமாம்!
அம்பானி வீட்டைப் பராமரிக்கும் வேலையாட்களுக்கு இந்த கல்வித் தகுதிகள் இருந்தால் இரண்டு இலட்சம் சம்பளமாம்.
அம்பானியின் வீடு
உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக குறிப்பிடப்படுவது முகேஷ் அம்பானியின் வீடுதான். இந்த வீட்டின் தோற்றமும் மதிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
அம்பானியின் வீடானது மும்பையில் 4 இலட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட அன்டிலியா வீடாகும். இந்த மாளிகை 8.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் வந்தாலும் அசையாமல் தூண் போல நிற்கும் வகையில் பல தொழிநுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
வேலையாட்களுக்கு சம்பளம்
அம்பானியின் வீட்டை பராமரிப்பதற்கு மட்டும் 600 பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று வேலைப்பார்த்து வருகிறார்களாம். அவர்களுக்கு 2 இலட்சம் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு அந்த வீட்டிலேயே தங்குமிட வசதியும் இருக்கிறதாம். இவர்களுக்கு வருட சம்பளம் மட்டும் சுமார் 24 இலட்சம் ஆகும். இவ்வாறு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்தினால் என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்று கேட்டால்,
இவர்களுக்கு பலகட்டமாக நேர்காணலும் எழுத்துத்தேர்வும் நடக்குமாம், அவர்களின் கல்வித்தகுதி கட்டாயமாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிகிரி படித்திருக்க வேண்டும்.
அம்பானி வீட்டில் இரவு, பகல் என ஷிப்ட் கணக்கில் வேலை இருக்குமாம். சிலருக்கு 24×7கூட வேலை செய்வார்களாம்.