முகலாய பாணியில் சிக்கன் குழம்பு... ஒரு முறை இப்படி செய்து பாருங்க அனைவருக்கும் பிடிக்கும்
பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் அலுவலக தொழில் புரியும் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக வித்தியாசமான முறையில் சமையல் செய்து சாப்பிட வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள்.
அசைவ பிரியர்கள் என்றால் அதிகமாகவர்கள் விரும்புவது சிக்கன் தான். பல்வேறு வகைகளில் சமைக்க கூடிய உணவுகளின் பட்டியலில் முக்கிய இடத்தை சிக்கன் பிடித்துவிடுகின்றது.
இந்திய உணவுகளில் பெரும்பாலும் முகலாயர்களின் தாக்கம் அதிகமாக காணப்பகின்றது. இவர்கள் பின்பற்றி சமையல் தந்திரங்கள் இன்றும் பிரபல்யம் வாய்ந்தவையாக இருக்கின்றது.
அந்தவகையில் முகலாய பாணியில் அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் சிக்கன் குழம்பை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
வெங்காயம் - 1 நறுக்கியது
சிக்கன் - ½ கிலோ
தயிர் - ½ கப்
முந்திரி-10
பேஸ்ட் செய்ய தேவையானவை
இஞ்சி - 1 அங்குல துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய்-3
பிரியாணி இலை-1
சீரகம் - 1 தே.கரண்டி
ஏலக்காய்- 4
மல்லி தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி
வெண்ணெய் - 2 தே.கரண்டி
உப்பு - தே.அளவு
எலுமிச்சை சாறு - 2
பாதாம் - 5
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து, சூடானதும் பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு மற்றும் மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் சிக்கன் சேர்த்து 3 தொடக்கம் 3 நிமிடங்கள் வரையில் நன்றாக வதங்கவிட வேண்டும்.
அதனையடுத்து தயிர், முந்திரி விழுது சேர்த்து நன்கு கிளறிவிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து நன்றாக வேகவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் பாதாம், கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான், அருமையாக சுவையில் முகலாய பாணியில் சிக்கன் குழம்பு தாயர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |