சூடான சாதத்தை சுவையா சாப்பிடணுமா?இந்த ஒரு தொக்கு இருந்தா போதும்
வீட்டின் சமையலில் பச்ச மிளகாய் இருப்பது மிகவும் அவியம். கார்ப்பு சுவைக்கு இந்த பச்ச மிளகாய் பயன்படுகிறது. இதில் பல வகையான சத்துக்களும் உள்ளன.
சிலர் இதை காரத்தின் காரணமாக ஒதுக்குவார்கள். ஆனால் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
இந்ம பச்சமிளகாயுடக் மல்லி தழை சேர்த்து அதை ஒரு தொக்காக செய்தால் சூடான சாதத்துடன் சுவையாக சாப்பிடலாம். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மல்லித்தழை – 2 கட்டு
- பச்சை மிளகாய் – 15
- புளி – சிறிய அளவு
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 10 பல்
- தாளிக்க தேவையான பொருட்கள்
- கடுகு – ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – கால் கப்
- உளுந்து – கால் ஸ்பூன்
- வறுத்துப் பொடிக்க தேவையான பொருட்கள்
- வெந்தயம் – ஒரு ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் மல்லித்தழையை நன்றாக கழுவி தண்ணீரை பிழிந்து எடுத்து, ஒரு வெள்ளை துணியில் பரப்பி உலர விடவேண்டும். அது நன்றாக உலர்ந்தவுடன் எமனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன், கடுகு, மிளகாய், பூண்டு, புளி என அனைத்தும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்து உலர்ந்த மல்லித்தழையை சேர்த்துக்கொள்ளவேண்டும். இதையும் வதக்கி, எடுத்து அனைத்தையும் ஆறவிடவேண்டும்.
அடுத்து அனைத்தையும் அரைத்து, அதில் வறுத்து பொடித்த, வெந்தயம் மற்றும் பெருங்காயத் தூளை கலந்துவிடுங்கள். இப்படி செய்து எடுத்துக்கொண்டால் பச்சமிளகாய் மல்லித்தழை தொக்கு தயார். இதை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |