கிட்னி நோயாளிக்கு மருந்தாக மாறும் முடவாட்டுக்கால் சூப்- இனி தூக்கலான சுவையில் சாப்பிடுங்க!
தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக குளிர்காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.
இந்த நோய் கால நிலை மாற்றங்களாலும் ஏற்படும், அந்த சமயத்தில் சரியான உணவு பழக்கங்கள் இல்லாவிட்டால் வலியை உங்களால் கட்டுபடுத்த முடியாமல் போய் விடும்.
மனிதர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மிக முக்கியமானது. எலும்புகள் வலுவிழந்து போகும் பொழுது நம்மால் வேலைகளை கூட செய்ய முடியாத நிலை உருவாகும்.
மருத்துவமனையில் தரப்படும் மருந்து மாத்திரைகளை எடுப்பதுடன் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்படியானால் நமது கிராமங்களில் கிடைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்து குடிக்கலாம். அதில் உள்ள ஆரோக்கிய பலன்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

அந்த வகையில், முடவாட்டுக்கால் கிழங்கு சூப் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு சூப்
தேவையான பொருட்கள்
- முடவாட்டுக்கால் கிழங்கு
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 8 பல்
- சின்ன வெங்காயம் - 15
- புதினா - 1 கைப்பிடி
- கொத்தமல்லி - 1 கைப்பிடி
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
முடவாட்டுக்கால் சூப் செய்முறை
முதலில் சூப்பிற்கு தேவையான அளவு முடவாட்டுக்கால் கிழங்கை எடுத்து, தோல் சீவி, துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர், ஒரு சுத்தமான மிக்ஸியில், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு அரைக்கவும். அதனுடன் துண்டுகளாக்கி வைத்திருக்கும் கிழங்கையும் சேர்த்து அரைக்கவும்.
கிழங்கு பொடியானதும், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, அரைக்கவும். அடுத்து, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் வெண்ணெய் விட்டு உருகியதும், அரைத்து வைத்திருக்கும் கலவை கொட்டவும்.

அதனுடன் கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5-6 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து வடிகட்டி எடுத்தால் காரசாரமான முடவாட்டுக்கால் கிழங்கு சூப் தயார்!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |