வீட்டில் பிரட் இருக்கா? அப்போ இந்த இந்த வெஜிடேபிள் பிரட் டோஸ்ட் செய்ங்க
குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடிக்குமட் நேரத்தில் ஆரோக்கியமானதும் சுவையானதுமான ஸ்நாக்ஸ் எப்படி செய்து கொடுப்பது என யோசிக்கின்றீர்களா? உங்கள் வீட்டில் இருக்கும் பிரட்டை பயன்படுத்தி ஒரு சுவையான, ஆரோக்கியமான டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.
காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த வெஜிடேபிள் பிரட் டோஸ்ட் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதும் சுவையானதுமாக இருக்கும். இந்த டோஸ்டை மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமல்லாமல், காலை டிபனாகவும் பரிமாறலாம்.
குறிப்பாக காய்கறிகளை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கும், இந்த டோஸ்ட் வழியாக காய்கறிகளின் ஊட்டச்சத்து கிடைக்கும். இந்த வெஜிடேபிள் பிரட் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று நாம் இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1/4 கப் (துருவியது)
குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
பிரட் - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றும் துருவிய கேரட் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் பிரட் துண்டுகளை எடுத்து, இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அதன் பின் பிரட் துண்டுகளை எடுத்து, கடலை மாவு கலவையில் பிரட்டி, பேனில் போட்டு, முன்னும், பின்னும் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் ப்ரை செய்து எடுத்தால், சுவையான வெஜிடேபிள் பிரட் டோஸ்ட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |