தினமும் உணவில் எவ்வளவு புளி சேர்த்துக்கொள்ள வேண்டும்? நிபுணர் கருத்து
புளிப்பு சுவை சிலருக்கு மிகவும் பிடிக்கும். இந்திய உணவில் புளி அசைவ உணவுகளிற்கு கூடுதலாக பயன்படுத்துவார்கள். புளிப்பு சுவையை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு பிடிக்கும்.
இதை குழம்புக்கும் பயன்படுத்துவது தமிழ்நாட்டில் சமையலில் பிரதானம். குழம்பு கெட்டு போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புளியை குழம்பில் சேர்ப்பார்கள். தெரு உணவுகளில் வைக்கப்படும் குழம்புகளில் புளி இல்லாத குழம்பே இருக்காது.
புளிக்குழம்பு என்றே தனியாகவும் வைக்கும் நடைமுறையும் உண்டு. இதுதவிர கத்தரிக்காய் புளிக்குழம்பு, சுண்டக்காய் புளிக்குழம்பு என இதில் பல வகைகளும் இருக்கின்றன.
மதிய உணவு எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் புளிக்குழம்பு நிச்சயம் இருக்கும். இவ்வாறு பயன்படும் புளியை எவ்வளவு உணவிற்கு சேர்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உணவில் புளி
இந்த சமைக்கும் புளியில் டார்டாரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், சுசினிக் அமிலம், பெக்டின், டானின்கள், ஆல்கலாய்டு, ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் உள்ளன. நமது உடலிலும் அதிக அளவிலான அமிலம் நிறைந்துள்ளது.
இதற்காக நாம் ஒரு நாளைக்கு உணவில் 10 கிராம் புளியை சேர்த்துக்கொள்வது சிறப்பானதாகும். புளியை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு நன்மையானது அல்ல. இதன் மூலம் வெளிப்படும் அமிலம் பற்களை சேதப்படுத்தும்.
புளியில் டேனின்கள் உள்ளிட்ட பல சேர்மங்கள் இருப்பதால் இது வயிற்றில் ஜீரணிப்பது கஷ்டம். இதனால் வாய்வு, அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் புளி அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
புளி அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சக்கரையின் அளவு குறைவாகி தலைச்சுற்றல் மற்றும் பலவீனம் ஏற்படுத்தும். மிக மக்கியமாக புளியை கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது.
இதை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது, இது வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கும். இத போல புளியை அளவோடு எப்போதும் பயன்படுத்த வேண்டும். எனவே வீட்டில் சமைக்கும் போது புளி சேர்த்தால் அதை அளவோடு 10 கிராம் அளவிற்கு சேர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |