நாடகம்னாலும் நியாயம் வேணாமா? பிரபல டிவி சீரியலுக்கு வந்த சோதனை
மெளன ராகம் சீரியலின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது சீரியலின் 2வது பாகம் ஒளிபரப்பாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது.
மௌன ராகம் 1
பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் மௌன ராகம் தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. முதல் பாகத்தில் அப்பாவான கார்த்திக் கிருஷ்ணாவின் பாசத்திற்காக சக்தி ஏங்கி கொண்டிருந்தார்.
ஆனால் ஒருநாள் எல்லா உண்மைகளும் தெரிய வர, சக்தியும் மல்லிகாவும் கார்த்திக் கிருஷ்ணாவை பிரியும் சூழ்நிலை ஏற்பட்டு பிரிந்து செல்கின்றனர்.
மதம் மாறிய வனிதா! வெளிநாட்டில் ஊர்சுற்றும் புகைப்படங்கள்
மௌன ராகம் 2ம் பாகம்
மௌன ராகம் 2வது பாகத்தில் குழந்தைகளாக இருந்து ஸ்ருதி சத்யா இருவரும் வளர்ந்துவிடுகின்றனர். இதில் வருண் - சத்யா திருமணத்திற்கு பிறகு சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இவர்கள் இருவருக்கும் இடையில் அரங்கேறும் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. தற்போது சத்யா வாழும் வீட்டில் இரண்டாவது மருமகளாக உள்ளே நுழைந்துள்ளார் ஸ்ருதி.
இவர் சத்தியாவின் அம்மா யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்ட நிலையில், அதனை உறுதிசெய்ய ப்ளான் ஒன்றினை அரங்கேற்றியுள்ளார். இதில் சத்யாவின் அம்மாவும் சத்யாவை பார்க்க வரவே ஸ்ருதி தனது வில்லித்தனத்தினை ஆரம்பித்துள்ளார்.
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியினை அவதானித்த ரசிகர்கள் நாடகம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று கேள்வி எழுப்பியதுடன், சத்யாவிற்கு ஸ்ருதி பயப்படும் படியாக காட்சிகளைக் கொண்டு வாருங்கள் என்றும் இந்த கதைகளம் நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர்.