2024 ல் நீ ஒரு சாதனையாளராக மாற வேண்டுமா? அப்போ இத மட்டும் செய்யாதீங்க
வாழ்க்கை ஒரு புத்தகம் என பலரும் கூறி கேள்விபட்டிருப்போம்.
வாழ்க்கை என்றால் அது ஒரு தொடக்கம் இருக்கும் அதே போல் அதற்கு ஒரு முடிவும் இருக்கும்.
அந்த வகையில் நாம் வாழும் வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமல்ல ரசிப்பதற்காகவும் இருக்கின்றது. பலர் வாழ்க்கையை வெறுத்தாற் போல் சில விடயங்களை தொடர்ந்து செய்வார்கள்.
ஏன்? எதற்காக,? யாருக்கு? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் அவர்களின் மனத்திற்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

இதற்கெல்லாம் ஒரே பதில், அவர்கள் எதற்கும் முயற்சி செய்யாமல் எல்லாம் தானாக வர வேண்டும் என நினைப்பார்கள். தேவையில்லாத வேலைகளுக்கு அதிகமான நேரத்தை செலவு செய்வார்கள்.
வாழ்க்கை பலர் வருவார்கள் போவார்கள் ஆனால் அவர்களை நம்முடைய மனம் ஞாபகம் வைத்து கொள்வதில்லை. ஆனால் நம் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை மாத்திரம் நேரம், திகதி, இடம் இவை அனைத்தையும் நம்முடைய மனம் ஞாபகம் வைத்திருக்கும்.
அந்த வகையில் நாம் நம்முடைய சிறப்பானதாக்க வேண்டுமா? அப்போது என்னென்ன விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

நாம் விடும் தவறுகள்
1. தேவையில்லாதவற்றை யோசித்து தற்போது செய்ய வேண்டிய வேலையை மறத்தல்.
2. அளவிற்கு அதிகமான சிந்தணை.
3. பிரச்சினை என்றால் அதற்கான ஒரு தீர்வு கண்டிப்பாக வரும். காத்திருங்கள் அது நீங்கள் செய்யும் முதல் முயற்சியாகும்.
4. தேவையில்லாதவற்றை வாழ்க்கையிலிருந்து விலக்குங்கள். அப்போது தான் வாழ்க்கை சிறக்கும்.

5. உங்கள் உடல், மனம் ஆரோக்கியம் குறித்து அதிகமான சிந்தியுங்கள். ஏனெனின் உங்களுக்காக இருப்பது நீங்கள் மட்டும் தான்.
6. உங்களின் வாழ்க்கைக்காக உங்களின் வளர்ச்சிக்காக நீங்கள் போராடுங்கள். அப்போது தான் சிறந்த இடத்தை அடையலாம்.
7. மற்றவர்களின் தவறை திருத்துவதற்கு ஒரு போதும் எத்தணிக்காதீர்கள். ஏனெனின் இந்த முயற்சியில் நீங்கள் தோற்று விடுவது மட்டுமல்லாது உங்களிடம் இருக்கும் தவறுகள் வளர்ந்து விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |