இப்படி சட்னி அரைச்சு சாப்பிடுங்க.. 10 இட்லி கூட பத்தாது
நாம் பல விதங்களில் சட்னி செய்து சாப்பிட்டிருப்போம்.
அந்த வகையில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான கடப்பா சட்னி எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 75 கிராம்
வெள்ளைப் பூண்டு - 6 பற்கள்
வரமிளகாய் - 12
தக்காளி - 2
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1/4 கரண்டி
கடுகு - 1/4 கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டு என்பவற்றை தோலுரித்துக்கொள்ள வேண்டும். பின் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அதன்பின்னர் வெள்ளைப் பூண்டு, வெங்காயம், மிளகாய் என்பவற்றை தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
அதன் பின்னர் தக்காளி பேஸ்ட்டை அதில் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். சட்னியில் காரத் தன்மை போகும்வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிட வேண்டும்.
எண்ணெயானது சட்னியில் இருந்து பிரிந்து வரும் வரை கொதிக்கவைத்து விட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கினால் சட்னி ரெடி!