Happy Mother's Day 2024 : அம்மாவை மகிழ்ச்சிப்படுத்த இதை செய்தாலே போதும்...
உலகில் சுயநலம் துளியும் இல்லாத அன்பு என்றால் அது தாய் அன்பு தான்.
கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள்.
குழந்தை பிறந்த பின்னர் தங்களின் சொந்த ஆசைகளுக்கும் லட்சியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும் உயர்ந்த குணம் தாய்க்கு மட்டுமே உரித்தானது என்றால் மிகையாகாது.
24 மணி நேரமும் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு தன்னலம் அற்ற அன்பும் அக்கறையும் கொண்ட அம்மாக்களின் தியாகத்துக்கு உலகில் நிகர் ஏதும் இல்லை.
பாடசாலை செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகம் செல்லும் கணவருக்கு வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினம் என அவர்களக்கு ஓய்வு உண்டு. ஆனால் அம்மாக்களின் ஈடு இணையற்ற உழைப்புக்கு வாழ்நாளில் விடுமுறை என்பதே கிடையாது.
இந்நிலையில் குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது நாம் அம்மாவை முழுமனதோடு நினைத்து, கொண்டாட வேண்டும் என்ற நோக்கம் கருதியே ஆண்டுதோறும் மே மாதம் 12ஆம் திகதி சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.
அன்னையர் தினத்தில் அம்மாமார்களை மகிழ்ச்சிப்படுத்த பலரும் பரிசு பொருட்களை வாங்கிக்கொடுக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.
ஆனால் உண்மையில் அம்மா மார்கள் எதிர்பார்ப்பது விலையுயர்ந்த பொருட்களையோ நகைகளையோ அல்ல.
அவர்களின் தேவை உங்களின் அன்பும் அக்கறையயும் தான். நீங்கள் அவர்களுக்காக செலவிடும் நேரம் தான் அவர்களை பொருத்தவரையில் பெருமதிமிக்க பரிசு.
அன்னையர் தினத்தில் அவரை மகிழ்விக்க வேண்டும் என்றால் ஆண்டு முழுவதும் உங்களுக்காக அம்மா என்னவெல்லாம் செய்தோரோ, அதையெல்லாம் இந்த ஒரு நாளாவது நீங்கள் அவர்களுக்கு செய்து கொடுங்கள்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சில சமயம் அனைவரது அழுக்கு ஆடைகளையும் துவைப்பது என வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி செய்வது அம்மாக்கள் மட்டும் தான். அன்னையர் தினத்தில் மட்டுமாவது அவர்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
அம்மாவுடன் மனம் விட்டு பேசுவதும் அவர்களின் பிரச்சினைகளை கேட்பதும் அவர்களுக்கு மன ரீதியான ஆறுதலை கொடுக்கும்.
வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அம்மாக்களின் கனவாக இருக்கின்றது.
எனவே இந்த ஒரு நாளிலாவது அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்துவது அல்லது வெளியில் செல்வது அவர்களுக்கு மனநிறைவை கொடுக்கும்.
கண்ணுக்கு தெரியும் கடவுளான அம்மாவை புறக்கணித்துவிட்டு நீங்கள் கடவுளுக்கு எத்ததை கோடி செலவு செய்தாலும் அதில் பயன் ஏதும் இல்லை.
அன்னையை போற்றுபவர்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல நிலையை அடைவார்கள் என்பது எழுதப்படாத விதி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |