டீ கேட்டது ஒரு குற்றமா? கடைசியில் பரிதாபமாக பறிபோன உயிர்
டீ போட்டுக் கொடுக்காத கோபத்தில் மாமியார் ஒருவர் மருமகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டீ கேட்ட மாமியார்
தெலங்கானா மாநிலத்தில் ஐதராபாத் ஹாசன் நகரை சேர்ந்த அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸிற்கும் 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு 6 மற்றும் 8 வயதில் மகள், மகன் உள்ள நிலையில், அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகமும்(53) இவர்களுடன் வசித்து வந்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 15 நாட்களாக மாமியார் மருமகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த நிலையில், சம்பவத்தன்று மாமியார் மருமகளிடம் டீ கேட்டுள்ளார்.
மருமகளை கொலை செய்த சோகம்
உடனே டீ போட்டு கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மருமகளுக்கும், மாமியாருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மருமகள் என்றும் கூட பார்க்காமல் கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மாமியாரையும் கைது செய்து அவரை விசாரித்தும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |