தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தை தற்போது எப்படி இருக்கின்றது? இதோ புகைப்படம்
செஞ்சி அருகே தாயால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையை நேரில் சந்தித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலம் விசாரித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக பச்சிளங்குழந்தை ஒன்று பெற்ற தாயால் தாக்கப்படும் கொடூரமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த குழந்தையின் நிலையை கண்டு தமிழகமே பதறியது.
ஈவு, இரக்கமின்றி நடந்துக் கொள்ளும் அந்த பெண்ணை கைது செய்ய வேண்டுமென சமூக வலைதளவாசிகள் கொந்தளித்தனர். அந்த வீடியோக்களை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகனின் மனைவி துளசி தான் அந்த பெண் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தான் வேறு ஒருவருடன் கள்ள தொடர்பில் இருப்பதாகவும் அதற்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை அடித்து தனது காதலனுக்கு வீடியோ எடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
துளசி அளித்த வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பால் மனம் மாறாத பச்சிளங்குழந்தை பிரதீப், தனக்கு நடந்ததை அறியாது தனது அண்ணனுடன் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. தனது தாத்தா, பாட்டியுடன் குழந்தை தற்போது பாதுகாப்பாக இருப்பதை அறிந்து தமிழக மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில், குழந்தையை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் குழந்தையின் மருத்துவ செலவுக்காக 10,000 ரூபாய் நிதியை வழங்கியுள்ளார். குழந்தையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
