Olympics 2024: வினேஷ் போகத் போல் பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
இந்தியாவின் ஒலிம்பிக் தங்கக் கனவில் ஏதாவது சிக்கல்கள் வந்துக் கொண்டே செல்கிறது.
இந்த வருடம் இந்தியா சார்பில் மல்யுத்த வீராங்கனையாக கலந்து கொண்டவர் தான் வினேஷ் போகட்.
தங்கப்பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 100 கிராம் அதிகமாக இருக்கிறார் என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது போன்று இந்தியாவின் ஒலிம்பிக் தங்க பதக்கக் கனவு பலமுறை சிதைந்து போயுள்ளது.
அப்படியான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும், கலந்துக் கொண்ட வீரர்கள் தொடர்பிலும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. வினேஷ் போகத்
இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், 82 சர்வதேசப் போட்டிகளில் தோற்கடிக்கப்படாத ஜப்பானின் யுய் சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
5-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனின் ஒஸ்டாவா லிவாச் மற்றும் கியூபா- யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் போன்றவர்களை தோற்கடித்தார். இப்படியொரு நிலையில், போகாட் எடையின் போது 50 கிலோ வரம்பிற்கு 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு மனமுடைக்கப்பட்டார். இதனால் வினேஷ் போகத் தன்னுடைய ஓய்வு நாளையும் அன்று ஏகமனதாக அறிவித்துள்ளார்.
2. நிஷா தஹியா
68 கிலோ மல்யுத்தப் பிரிவில் நிஷா தஹியா என்ற பெண்ணிற்கு இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வட கொரியாவின் பாக் சோல் கம்முக்கு எதிரான தனது காலிறுதிப் போட்டியில் 6-1 என முன்னிலையில் இருந்த போது தஹியா விரலில் காயம் அடைந்தார்.
இதனை தொடர்ந்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும் அவரால் இடத்தை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இறுதியில் 10-8 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இறுதியாக தான் இந்த காயத்தினால் அவருடைய தோள்பட்டை மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
3. மில்கா சிங்
"பறக்கும் சீக்கியர்" என்று அழைக்கப்படடவர் தான் மில்கா சிங்கின். 1960 ஆம் ஆண்டு உரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக்கில், சிங் 400 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வெல்ல முயன்றார். முதல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முன்னணிலையில் இருந்த மில்கா சிங்கின் ஒரு கணம் திரும்பிப் பார்த்ததால் தோல்வியை சந்தித்தார்.
அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட தென்னாப்பிரிக்கா- மால்கம் ஸ்பென்ஸ் முன்னேறி விட்டார். இவரின் வெற்றி 45.73 வினாடிகளில் நடந்தது. நான்காவது இடத்தை பிடித்து கொண்ட சிங் வெண்கலப் பதக்கத்தை பெற வெறும் 0.1 வினாடிகள் பின்தங்கிய நிலையில் இருந்தார். இது ஒலிம்பிக் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பதிவாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |