மீனாவால் கொலையாளியான முத்து..நெஞ்சு வலியால் துடிக்கும் அண்ணாமலை- பரபரப்பான தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன்னுடைய அப்பாவிற்கு நெஞ்சு வலி வர காரணமாக இருந்த ரோகிணியை அடித்து கொலை செய்வது போன்று கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது.
சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை எடுத்துக் காட்டும் விதமாக எடுக்கப்படும் இந்த சீரியலில் முத்துவை விட ரோகிணி மிக முக்கியமான கதாபாத்திரம்.
ஏற்கனவே திருமணமாகி தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை மறந்து, தனக்கானவொரு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனோஜை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். க்ரிஷை வளர்க்க முடியாமல் ரோகிணியின் அம்மா பல வழிகளில் கெஞ்சி போராடி பார்க்கிறார். ஆனாலும் ரோகிணி மனம் இறங்கி உண்மைகளை அவருடைய வீட்டில் கூறுவது போன்று இல்லை.

என்ன நடந்தாலும் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் ரோகிணி தெளிவாக இருக்கிறார்.
மீனாவால் கொலையாளியான முத்து
இந்த நிலையில்,ரோகிணி அவருடைய அப்பாவுக்கு காரியம் செய்யும் பொழுது மீனா பார்த்து விடுகிறார். அதன் பின்னர், ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு, ரோகிணியை கண்டிக்கிறார்.
இதனை தடுக்க நினைக்கும் ரோகிணி அவருடைய இறப்பு நீங்கள் சொல்லப்போகும் உண்மையில் தான் இருக்கிறது என மீனாவின் நல்ல உள்ளத்தை ரோகிணி பயன்படுத்திக் கொள்கிறார். ஆனாலும் மீனாவிற்கு குடும்பத்திலுள்ளவர்களை ஏமாற்ற மனம் வரவில்லை. இதனால் வீட்டில் சோகமாகவும், குழப்பமாகவும் மீனா இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்கையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் ரோகிணி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட அண்ணாமலை நெஞ்சு வலியால் துடிக்கிறார். இதனை பார்த்த முத்துவிற்கு கோபத்தை அடக்க முடியவில்லை. இதனால் ரோகிணியை அடித்து விடுகிறார்.
ரோகிணி படியில் இருந்து தவறி கீழே விழுகிறார். மனோஜ் சென்று பார்த்த பொழுது ரோகிணியின் உயிர் மனோஜ்ஜீன் மடியிலேயே போய் விடுகிறது. இந்த விவாகரத்தில் பொலிஸார் முத்துவை கைது செய்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பதறிப்போய் பொலிஸார் பின்னால் ஒடுகிறார்.
இது வெறும் கனவாக போயிருமா? என சின்னத்திரை ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |