இளம் வயதினரை குறி வைக்கும் நீரிழிவு நோய்.. மக்களே இனி உஷார்!
பொதுவாக நாளுக்கு நாள் நீரிழிவுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் இது போன்ற நாள்ப்பட்ட நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில், இந்தியாவில் சுமாராக 101 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய நீரிழிவு நோயை முதலில் கண்டறிவதால் இலகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் அதற்கு முதல் உடம்பில் நடக்கும் சில விடயங்களை கவனிப்பது அவசியம்.

அந்த வகையில், நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?என தெரிந்து கொள்ள என்னென்ன அறிகுறிகளை அவசியம் கவனிக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. சிலர் திடீரென எந்தவித காரணமும் இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
2. பசி அதிகம் வருவது போன்று உங்களுக்கு தோன்றினால் அல்லது பசியை அடக்க முடியாதது போன்று உணர்வு இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கலாம்.

3. டயட்டில் இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைவது போன்று தோன்றினால் உங்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கலாம்.
4. நுரை நுரையாக சிறுநீர் வெளியேறுதல் அல்லது சிறுநீர் கழித்த பின்னர் துர்நாற்றம் வருவது போன்று உணர்ந்தால் நீங்கள் சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

5. அடிக்கடி பாதங்கள் இரண்டிலும் எரிச்சல் அல்லது ஏதாவது ஊறுவது போன்று தோன்றினால் உங்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கலாம். முடிந்தளவு இது போன்ற அறிகுறிகளை கண்டால் அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |