பொய்யை உண்மை போல அடித்து பேசும் ராசியினர் - இவர்கள் நட்பு கேடு
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனிப்பட்ட குணநலன்கள் உண்டு என கூறப்படுகின்றது. அந்த வகையில் பல ராசியில் பிறந்த நபர்கள் பொய் மட்டுடே பேச கூற கூடியவர்கள் என கூறப்படுகின்றது.
ஆனால் இந்த உலகத்தில் பொய் பேசுபவர் என்றால் நாம் எல்லோரையும் தான் சொல்லலாம். ஏதோ ஒரு சூழ்நிலையில் எதற்காகவோ தன்னை காப்பாற்றி கொள்ள பொய் கூறுவார்கள்.
இப்படி ஏதேனும் ஒரு தருணத்தில் அல்லது சில நல்ல விஷயத்திற்காக பொய் சொல்லுவது தவறு இல்லை. ஆனால் எல்லா நேரத்திலும் வாயை திறந்தாலே பொய் கூறுவது தவறு.
இது மற்றவர்களுக்கும் கேடும் அவர்களுக்கும் கேடு. அப்படி ஜோதிடத்தின்படி சில ராசிகள் பொய்யை உண்மை போலவே அடித்து பேசும் சில ராசிகள் குறிப்பிடபட்டுள்ளது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.
மிதுனம்

- ஜோதிடத்தின் படி மிதுன ராசியினர் மிகவும் இனிமையாக பேசக் கூடியவர்கள்.
- அதோடு இவர்கள் மிக அழகாக பொய்களை சொல்வதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.
- சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் சில வேலைகளை முடித்து தங்களுடைய திறமைகளை நிரூபிப்பார்கள்.
- ஆனால் இவர்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் தங்களின் புத்திசாலித்தனமான பொய்யால் தன்னுடைய ஆளுமையை மிக எளிமையாக மாற்றிக் கொள்வார்கள்.
துலாம்

- துலாம் ராசி சேர்ந்தவர்கள் வசீகரமான முகம் மற்றும் பேச்சை கொண்டவர்கள்.
- இதன் மூலம் பிறரை தங்கள் வலைக்குள் எளிதாக இழுத்துக் கொள்வார்கள்.
- இவர்கள் பேச்சில் பிறர் அடிமையாகி விடுவார்கள்.
- மேலும் இவர்கள் பேசுவது உண்மையா, பொய்யா என்று உணராத அளவிற்கு இவர்களின் பேச்சு இருக்கும்.
- பல நேரங்களில் தங்களின் வேலைகளை பிறரை செய்ய வைக்க அற்புதமாக தங்களின் பொய்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
- அப்பாவியாக தோன்றும் இவர்கள் எப்போது உண்மை பேசுவார்கள் என்று கண்டுபிடிப்பது தான் கடினம்.
மீனம்

- மீன ராசி மிகவும் அன்பானவர்களாகவும், பிறர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
- அதே சமயம் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, தன்னுடைய காரியம் நடக்க அழுவது போல் நடித்து நிலைமையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தன் வேலைகளை செய்து முடிப்பார்கள்.
- இவர்கள் பார்க்க மிகவும் அப்பாவியாக இருப்பார்கள்.
- ஆனால் அவர்கள் அப்பாவி அல்ல என்பதை உணர்ந்து நடப்பது நல்லது.
- பொதுவாக இவர்கள் கற்பனை உலகத்தில் வாழக்கூடியவர்கள்.
- அதே சமயம் இவர்கள் சொல்லக்கூடிய கற்பனை கதைகளை நம்பி பலரும் ஏமாறவும் வாய்ப்பு உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).