காலையில் டீ குடிப்பவரா நீங்கள்? ஜாக்கிரதை
டீ யை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காலையில் எழுந்தவுடன் டீயொன்றை குடித்தால்தான் அவர்களின் பொழுது இனிதாக விடியும்.
ஆனால், காலையில் எழுந்ததும் டீ குடிப்பது என்பது ஆரோக்கியத்தில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.
காலையில் டீ குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்பது என்னவோ உண்மைதான்.
image - be bodywise
ஆனால் அதிக காபின் நிறைந்த டீயை வெறும் வயிற்றில் குடிப்பது உடலுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் டீயில் காணப்படும் காபின் வயிற்றிலுள்ள அமிலத்தின் உற்பத்தியை தூண்டும் தன்மை கொண்டது.
அதுமாத்திரமின்றி இயற்கையாவே உற்பத்தியாகும் கார்ட்டிசால் அளவுகளிலும் தலையிடுகிறது.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மோசமாக்குகிறது - டீயில் உள்ள இரும்பு, கல்சியம், டானின்கள் போன்ற தாதுக்களுடன் இணையும் தன்மை கொண்டவை.
image - healthwire
இதன் காரணமான நமது உடல் அந்த தாதுக்களை உறிஞ்சுவதில் சிக்கல்நிலை உருவாகிறது.
வயிற்றெரிச்சல் - எதுவும் சாப்பிடாமல் டீ குடிக்கும்பொழுது, அது வயிற்றில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக வயிற்றில் குமட்டல், உப்புசம் போன்றன ஏற்படும்.
பற்சிதைவு - அதிகமாக டீ குடிக்கும்பொழுது பற்சிதைவு ஏற்படும் வாய்ப்பு காணப்படுகிறது. இதற்குக் காரணம் டீயில் இயற்கை அமிலங்கள் இருப்பது தான்.
நீர்ச்சத்து இழக்கப்படுகிறது - டீ பருகியவுடன் அதிகப்படியான நீர்ச்சத்து உடலிலிருந்து சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இது உடலில் நீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது.
image - tetley tea australia