Protein Recipe: பச்சை பயறு ரொட்டி- யாரெல்லாம் சாப்பிடணும்?
புரதச்சத்தை உடம்பில் அதிகப்படுத்தும் பச்சை பயற்றை ஊற வைத்து எப்படி ரொட்டி தயாரிக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சை பயறு- 4 கப்
- வெங்காயம்- 1/4 நறுக்கியது
- பெரிய சீரகம்- 1 கரண்டி
- இஞ்சி- கொஞ்சம்
- பூண்டு- 5 பல்
- பச்சை மிளகாய்- 2
- கேரட்- 1 நறுக்கியது
- எலுமிச்சை பழம் - 1
- சாட் மசாலா ( Chaat Masala)- 1 கரண்டி
- ஓமம்- 1/2 கரண்டி
- மஞ்சள்- 1/4 கரண்டி
- உப்பு- தேவையான அளவு
- கோதுமை மா- 2 கப் அளவு
- எண்ணெய்- 1/2 கரண்டி
ரொட்டி செய்வது எப்படி?
முதலில் தேவையான அளவு பச்சை பயற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். சுமாராக 8 மணி நேரம் ஊற வைத்த பின்னர், அதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி விடவும். அதனுடன் வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கேரட் ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கி, போட்டு அரைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு, அதற்கு மேல் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். அடுத்து, வெங்காயம், கொத்தமல்லி தழை, சாட் மசாலா ( Chaat Masala), ஓமம், மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இந்த பச்சை பயறு விழுது உடன் கோதுமை மா கொஞ்சமாக கலந்து கொள்ளவும். பிசைந்து சரியான பதத்திற்கு வந்த பின்னர், அதனுடன் இன்னும் கொஞ்சம் மா கலந்து கொள்ளவும்.

மா பிசைந்து எடுத்த பின்னர், பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் மாவை எடுப்பதற்காக கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொள்ளவும். எண்ணெய் கொஞ்சமாக விட்டு பிசைந்து, 10 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.
கடைசியாக பச்சை பயற்று மாவை கொஞ்சமாக உருட்டி சப்பாத்தி போன்று தட்டி எடுத்தால் ஆரோக்கியமான பச்சை பயற்று ரொட்டி தயார். இதனை காரசாரமான குழம்பு உடன் வைத்து பரிமாறலாம்.
அவசியம் சாப்பிட வேண்டியவர்கள்
1. வளர்ந்து வரும் குழந்தைக்க 3 வயதுக்கு பின்னர், தன்னுடைய உடல் வளர்ச்சிக்கும், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் புரதம் அவசியம்.

2. இளம் வயதில் இருப்பவர்கள் ஜீம் செல்வது வழக்கம். அப்படியானவர்கள் தங்களின் டயட் பிளானில் இந்த பச்சை பயற்று ரொட்டியை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களின் தசைகளை வலுப்படுத்தி, பழுதுப்பார்க்கலாம்.
3.புரதச்சத்து குறைப்பாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தன்னுடைய உடலில் இந்த சத்தை அதிகப்படுத்துவதற்காக இது போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |