Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க வீட்டு குழந்தைங்க கிட்ட சொல்லாதீங்க
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
வேண்டாம், கூடாது உள்ளிட்ட வார்த்தைகளை குழந்தைகளிடம் பயன்படுத்தும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சில குழந்தைகளுக்கு இப்படியான வார்த்தைகளை கூறும் போதும் கோபம் வரும் அது சில நேரங்களில் அழுகையாகவும் மாறலாம்.
அதனால் இப்படியான வார்த்தைகளை எப்படி மறைமுகமாக குழந்தைகளிடம் கூறலாம் என்பதனை பெற்றோர்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது. குழந்தைகள் இருக்கும் இடங்களில் பெற்றோர்கள் நேர்மறையாகவும் மரியாதையாகவும் பேச வேண்டும். இதன் மூலம் சிறந்த தொடர்பாடலை குழந்தைகளை கற்றுக் கொள்கிறார்கள்.
இப்படியான பல விடயங்களை குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்படி என்னென்ன விடயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள்
1. குழந்தைகள் சில பொருட்களை கேட்டு அழும் போது அவர்களை திட்டுதல் மற்றும் அழுத்தமாக பேசுதல் கூடாது. மாறாக அவர்களின் கவனங்களை திசை திருப்ப முயற்சி செய்ய வேண்டும். இப்படியான உணர்வை சரியாக பயன்படுத்தி குழந்தைக்கு கொடுத்து விட்டால் அவர்களுக்கு கோபம் மற்றும் அழுகை வராது.
2. ஒரு செயலை செய்ய வலியுறுத்தும் போது அவர்களின் செயற்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். மாறாக தவறாக செய்தால் கடுமையான சொற்களை பயன்டுத்தவோ திட்டவோ கூடாது.
3. சில சமயங்களில் குழந்தைகள் அவர்கள் வயதிற்கு மீறிய வேலைகளை செய்ய முற்படுவார்கள். இது போன்ற நேரங்களில் அந்த விடயம் தவறு என்பதனை பக்குவமாக எடுத்து கூற வேண்டும். அவர்களை இலகுவில் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களுக்கு அது தவறு என்பதனை சரியாக புரிய வைக்க வேண்டும்.
4. குழந்தைகளுக்கு என்று எல்லைகள் உள்ளது. இதனை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக குழந்தைகளை குழந்தைகளாக நடத்த வேண்டும். அவர்கள் செய்யும் அனைத்தையும் பெற்றோர்கள் ஆதரிக்கக் கூடாது.
5. குழந்தைகளின் கவனங்களை திசைத்திருப்ப வேண்டும் என்றால் அவர்களின் மழலை மொழியில் அவர்களிடம் சற்று உரையாடலாம். இது அவர்களின் எதிர்மறையான எண்ணங்களை மறையச் செய்யும். இது போன்ற நேரங்களில் அடித்தால் அது அவர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
6. பெற்றோர்கள் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். பெற்றோர்களிடம் உள்ள அழுத்தத்தை ஒருபோதும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது. இதனை தவறும் பட்சத்தில் குழந்தைகளுக்கு நம்மீது வெறுப்பு உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |