காலை நேரத்தில் மிகவும் சோர்வாக இருக்கிறீர்களா? இதை மட்டும் செய்வதற்கு பழகிக்கோங்க
உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது? உண்மையாகச் சொன்னால், அது உங்கள் உடலை சார்ந்தது. உடற்பயிற்சியை எந்த நேரத்தில் செய்வதால் உங்கள் உடலில் நீங்கள் விரும்பிய விளைவுகள் உண்டாகிறதோ, அந்த நேரமே சிறந்த நேரம்.
காலை நேர உடற்பயிற்சி
ஒரு இரவு தூக்கத்திற்குப் பிறகு, உங்கள் உடல் அமைதியான நிலையில் உள்ளது மற்றும் உடல் செயல்பாடுகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன.
காலை நேர உடற்பயிற்சி உடலின் ஆற்றலை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் நாளை உற்சாகமாகத் தொடங்க உதவலாம். இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக உணர முடியும்.
நன்மைகள்:
ஒரு நாளை உடற்பயிற்சியுடன் தொடங்குவதால், காலை உடற்பயிற்சிகளில் நிலைத்தன்மையின் வாய்ப்புகள் அதிகம். காலையில் முதல் வேலையாக செய்வது உடற்பயிற்சி.
காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளும்போது, நீங்கள் சீராகவும், உங்கள் உடல் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் மாறுகிறீர்கள்.
காலை உடற்பயிற்சிகள் உங்கள் ஆற்றல் அளவை உகந்ததாக வைத்திருக்கும். நாள் முழுவதும் ஆற்றல் குறைபாடு ஏற்படுவதில்லை. இது வேலையிலும் உங்கள் செயல்திறனை அதிகரிக்கிறது.
மாலை உடற்பயிற்சியுடன் ஒப்பிடும் போது காலையில் உடற்பயிற்சி செய்வது, குறிப்பாக காலை உணவுக்கு முன் உடற்பயிற்சி செய்வது வேகமாக கொழுப்புக்களை எரிக்க ஊக்குவிக்கிறது. தவிர, இது அதிக கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
இதன் சவால்கள் என்ன?
முதலில், அதிகாலையில் எழுவதே ஒரு மிகப்பெரிய சவால். காலையில் எழுந்தவுடன் நீங்கள் பலவீனமாக உணரலாம் , உங்கள் ஆற்றல் அளவு மிகவும் குறைவாக இருக்கலாம், இதனால் உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கலாம்.
நமது உடல் செயல்பாடுகள் காலையில் சுறுசுறுப்பாக இருப்பதில்லை, குறிப்பாக இரவில் காற்றுப்பாதைகள் சுருங்குவதால் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இருப்பதில்லை. எனவே, மக்கள் பெரும்பாலும் காலையில் மூச்சு பிடித்து உடற்பயிற்சி செய்வது கடினமாக இருக்கும்.
காலையில் எழுந்த பிறகு, மூட்டுகள் மற்றும் தசைகள் விறைப்பாகின்றன, இதனால் அவை கிழியவும் வாய்ப்புள்ளது. இதனால் தான் ஒரு வொர்க்அவுட்டுக்கு முன், குறிப்பாக காலையில் வார்ம் அப் செய்வது அவசியம்.
உடற்பயிற்சி செய்வதால் கொழுப்பு எரிக்கப்படுகின்றன. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் எரிக்கப்படுவதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் சில அபாய விளைவுகள் ஏற்படலாம்.