இட்லி மாவு இல்லையா? 10 நிமிடத்தில் தயாராகும் சூப்பரான காலை உணவு
பொதுவாகவே காலை உணவு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் மிக முக்கியமான ஒன்று தான். இந்த காலை உணவை தவிர்த்தால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்.
இதற்காக காலையில் கஷ்டபடாமல் ஈஸியான சாப்பாடாக ரவா தோசை செய்து சுவைக்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 1 கப்
- ரவை- ¼ கப்
- மைதா- ¼ கப்
- பெருங்கயாத் தூள்- ¼ தேக்கரண்டி
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 1
- இஞ்சி- 1 துண்டு
- சீரகம்- ½ தேக்கரண்டி
- மிளகு- ½ தேக்கரண்டி
- தயிர்- 2 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை, எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மா, ரவை, மைதா மா, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம், இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
அதில் தயிரும் தண்ணீரும் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு தோசை தவாவில் சிறிதளவு எண்ணெய் தடவி அதன்மேல் கரைத்து வைத்த மாவை தோசையாக ஊற்றி எடுத்தால் மொறு மொறுப்பான ரவா தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |