Mor Kulambu:பன்னீர், வெள்ளரி வைத்து வித்தியாசமான ஊட்சத்து நிறைந்த மோர் குழம்பு ரெசிபி
நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று.
இதை தயிரில் இருந்து செய்வார்கள்.இதை பலரும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்வார்கள். பொதுவாக இது வெண்டக்காயை வைத்து செய்வார்கள். இந்த ரெசிபியில் வித்தியாசமாக பன்னீர், வெள்ளரி வைத்து மோர் குழம்பு செய்யப்போகிறோம்.
வெள்ளரியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. மோர் குழம்பு வெள்ளரியில் செய்யும் போது அது மிகுந்த சுவையாக இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பன்னீர் – 100 கிராம்
- தயிர் – முக்கால் கப்
- பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- வெள்ளரி பிஞ்சு – 1
- பெரிய வெங்காயம் – 1
- இஞ்சி – அரை இன்ச்
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – அரை ஸ்பூன்
- வர மிளகாய் – 1
- வரமிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
- சீரகத்தூள் – கால் ஸ்பூன்
செய்யும் முறை
முதலில் பன்னீர், தயிர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை மிக்ஸியில் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடப்பில் ஒரு சமைக்கூடிய பாத்திரத்தை வைத்து எண்ணை ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் கடுகு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவேண்டும்.
அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அந்த தயிர் கலவையில் சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வெள்ளரி பன்னீரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பத்து நிமிடம் கொதித்து வந்ததும் இதில் மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். இப்படி செய்து எடுத்தால் சுவையான மோர் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |