உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் புரோட்டின் தோசை... எப்படி செய்வது?
பொதுவாகவே காலையில் ஆரோக்கியமான உணவை உட்க்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமை.
அதிலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் உணவுகளில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள்.
அந்தவைகையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தரக்கூடிய பச்சை பயறு வைத்து எப்படி புரோட்டின் நிறைந்த சுவையான பெசரட் தோசை செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1
இஞ்சி - 1 சிறிய துண்டு
சீரகம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
தண்ணீர் - 1 கப்
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி, குறைந்தது ஒரு 8 மணிநேரம் வரையில் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாசிப்பருப்பை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் கறிவேப்பிலை, வரமிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்து எடுத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மாவு கெட்டியாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு சிறிது நீரை ஊற்றி கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
கடைசியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றினால், சுவையான புரோட்டின் நிறைந்த பாசிப்பருப்பு தோசை தயார். அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |