சந்திர பெயர்ச்சியில் உஷாராக இருக்க வேண்டிய 3 ராசியினர் இவங்க தானாம்
சந்திர பெயர்ச்சியில் மோசமான காலக்கட்டத்தை சந்திக்கும் ராசியினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களின் மாற்றங்களும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சந்திரன் கடன ராசியின் அதிபராக காணப்படுகின்றார்.
ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் வரை நீடிப்பார். கிரகங்களிலே மிகச்சிறிய காலக்கட்டத்தில் ராசியில் இருப்பவர் சந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மேஷ ராசியில் நுழைந்துள்ளார்.
இதனால் எந்தெந்த ராசியினர், வாழ்க்கையில் மோசமான தாக்கத்தினை சந்திப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் 12வது வீட்டிற்கு சந்திரன் சென்றுள்ள நிலையில், மோசமான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கின்றது. இக்காலத்தில் செலவுகள் அதிகரிப்பதுடன், வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

கன்னி
கன்னி ராசியில் சந்திரன் 8வது வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், பல சவால்களை இந்த ராசியினர் சந்திக்க உள்ளனர். ஆரோக்கியத்தில் பிரச்சனை, வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இவை உங்களுக்கு சவாலாகவும் இருக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் சற்று பொறுமையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசியில் 5வது வீட்டில் சந்திரன் உள்ள நிலையில், எளிதாக யாரையும் நம்ப வேண்டாம். செலவு செய்வதில் கவனம் தேவை. தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால், வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |