சனி-சந்திரன் சேர்ந்து உருவாக்கும் விஷ யோகம்: 10 நாட்களில் தேடி வரும் ஆபத்து
ஜோதிடத்தின்படி சனி மற்றும் சந்திரன் சேர்ந்து உருவாக்கும் விஷ யோகத்தால் சில ராசிகள் வரும் மார்ச் மாதத்தில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
விஷ யோகம்
ஜோதிடத்தின்படி மார்ச் 19 மீன ராசியில் னியுடன் சந்திரன் இணைகிறார். இதன் காரணமாக விஷ யோகம் உருவாகிறது. ஜோதிடத்தில் சனி மிகவும் நேர்மையான கிரகம் என்று கருதப்படுகின்றார்.
ஜோதிடத்தில் சந்திரன் நீர் கிரகம் என அழைக்கப்படுகிறார். இரக்க குணம், தாய் அன்பு, கற்பனைத்திறன், கலை ஆர்வம் மற்றும் அனைவரையும் கவரும் அழகு ஆகியவை சந்திரனின் முக்கிய குணங்களாகும்.
இவர் வளர்பிறையாக இருந்தால் மகிழ்ச்சி, புகழ், செல்வம் மற்றும் சுபீட்சத்தையும், தேய்பிறையாக இருந்தால் மனக்குழப்பம், சவால்களையும் தருவார்.
இதன்படி சனி மற்றும் சந்திரனின் சேர்க்கை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எச்சரிக்கையை கொடுக்கப்போகின்றனது என கூறப்படுகின்றது. அது எந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
- மேஷ ராசிக்கு இந்த சேர்க்கை பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும்.
- வாழ்க்கையில் இதுவரை நீங்கள் உழைத்து சேகரித்த பணம் அதிகமாக செலவாகும்.
- மன அழுத்தம் மற்றும் செய்யும் வேலையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- நீங்கள் வியாபாரம் செய்தால் அதில் மிகவும் கவனத்துடன் இருங்கள்.
- முடிந்தவரை உங்கள் நிதி நிலை பாதிக்கப்படாமல் பார்த்துகொள்ளுங்கள்.
மிதுனம்
- மிதுன ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி-சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது.
- நீங்கள் செய்யும் தொழிலில் உங்களுக்கு அதிக நஷ்டம் வர நேரிடும்.
- எதிலும் நிதானமான யோசித்து முடிவெடுப்பது நல்லது.
- உங்கள் கோபத்தை கொஞ்சம் குறைத்து கொள்வது நல்லது.
- வேலை செய்யும் இடத்தில் மேலதிரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
கடகம்
- கடக ராசியின் பாக்ய ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது.
- இதனால் உங்களுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் ரொம்ப தூரம்.
- ஏதாவது புதிய திட்டங்களில் அவசரப்பட்டு இறங்காதீர்கள்.
- நீங்கள் நினைத்ததில் இருந்து எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். எதிலும் பின்வாங்காமல் இருங்கள்.
துலாம்
- துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது.
- இந்த கால கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் மோசமடையலாம்.
- என்னதான் வழமை போல இருந்தாலும் எல்லாவற்றிலும் சோம்பேறித்தனம் இருக்கும்.
- உங்கள் வாழ்க்கை முறையை சமனிலையாக மாற்றி கொள்வது உங்களுக்கு நல்லது.
மீனம்
- மீன ராசியில் சந்திரன் மற்றும் சனி இணைந்திருப்பார்கள்.
- இந்த காலகட்டத்தில் உருவாகும் விஷ யோகத்தின் தாக்கத்தால், தன்னம்பிக்கை குறையும்.
- காதல் உறவோ அல்லது திருமண உறவோ கருத்து வேறுபாடும் விரிசல் உண்டாகவும் நேரிடும்.
- எதிலும் நிதானமாக செயற்படுங்கள்.
- பண கொடுக்கல் வாங்கல்களை இந்த நேரத்தில் வைத்துக்கொள்ளதீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).