எதிர்பார்ப்பை எகிறவைக்கும் மூக்குத்தி அம்மன் 2 டீசர் இதோ! ரிலீஸ் எப்போது?
சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளதுடன் ரிலீஸ் திகதியும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன் 2
பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனால், படத்தின் நட்சத்திரப் பட்டாளமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். சுந்தர் சியின் இயக்கம், நயன்தாராவின் நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணி என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகி வரும் இப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் அறிமுகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |