தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு மட்டுமே குரங்கு அம்மை பரவுவதில்லை... எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்!
குரங்கு அம்மை நோய் ஓர் பாலின உறவு கொள்பவர்களுக்கு மட்டுமே வருவதில்லை, அனைவருக்குமே வரும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவிக்கொண்டு வருவதால், உலகம் முழுதும் மெல்ல பரவ வாய்ப்பு இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 75 நாடுகளில் தற்போதுவரை சுமார் 16,000-க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போல மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நோய் தொற்று குறித்து மேற்கொண்ட ஆய்வில் 95 சதவிகிதத்தினர் பாலியல் நடவடிக்கை மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 98 சதவிகிதத்தினர் பைசெக்ஷூவல் அல்லது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவரின் அசுத்த ஆடைகளை தொடும்போதும் வைரஸ் பரவும் என தெரிவிக்கின்றனர்.
அடுத்து தொற்று பரவல் விவகாரத்தில் ஆணுறை எந்த விதத்திலும் பயனளிக்காது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.