ஆட்டிப் படைக்கும் குரங்கு அம்மை! நோய் பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?
இங்கிலாந்தில் மட்டும் மேலும் 104 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகெங்கும் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
குரங்கு அம்மை
இந்நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தற்போது பிரான்ஸ், அமெரிக்கா 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பரவியுள்ளது.
மருத்துவ கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை அபாயகரமானது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குரங்கு அம்மைக்கு சிகிச்சை என்ன?
குரங்கு அம்மை பாதிப்புக்கு முறையான சிகிச்சை முறை இதுவரை இல்லை. அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சையளிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. பாதிப்புக்குள்ளான நபர்களை, உடனடியாக தனிமைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, தோல் வெடிப்புகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும். வாய் புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் வாய் கொப்பளிப்பதன் மூலம் சரி செய்யலாம் என கூறப்படுகிறது.

அச்சத்தில் உலக நாடுகள்
ஏற்கனவே இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் மேலும் 104 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இங்கிலாந்தில் மட்டும் இதுவரை 470 பேர் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அந்நாட்டில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.