பணத்துக்கு தட்டுப்பாடு வரவே கூடாதா? இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் போதும்
வாஸ்து சாஸ்திரம் என்று வந்து விட்டால், அதற்குரிய வகுக்கப்பட்ட சாஸ்திரங்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
வாஸ்து அடிப்பமையில் சில பொருட்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்த விஷயங்களின் அடிப்படையில் நம் பெரியோர்களும், சாஸ்திரங்களும் குறிபிடப்பட்டுள்ள.
அனைவருக்குமே பணம் தேவை. பணத்தை போதும் என்று சொல்லும் யாரும் உலகில் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டம் தரும் சில பொருட்கள் காணப்படுகின்றது.
அவை வீட்டை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல், வீட்டிற்கு பணத்தை கொண்டு வரும் என்பது ஐதீகம். இப்ப வீட்டில் உள்ள பணப்பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் 3 சங்கு பூக்களை ஒரு பானையில் போட்டு வைப்பது பணப்பிரச்சினைகளுக்கும் கடன் தொல்லைகளுக்கும் சிறந்த தீ்ர்வு கொடுக்கும். இவ்வாறு மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்துவந்தால் பணவரவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
வாஸ்து சாஸ்திரங்களின் பிரகாரம் குதிரையின் கால் வளையம் மிகவும் புனிதமாகதாகவும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்க கூடியதாகவும் இருக்கும். இதில் மஞ்சள் தடவி சாமி அறையில் வைத்திருப்பதால் வீட்டில் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது.
கிராசுலா தாவரத்துக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் வீட்டில் செல்வம் பெருகும்.
3 சீன நாணயத்தை எடுத்து அதை சிவப்பு கயிற்றில் கட்டி வீட்டில் வைத்தால் எப்போதும் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராத என்பது ஐதீகம். மத சாஸ்திரங்களின் அடிப்படையில் இதற்கு மிகுந்த மதிப்பு காணப்படுகின்றது.
குபேரன் செல்வத்திற்கு கடவுளாக பார்க்கப்படுகின்றார். அதனால் பணமூட்டையுடன் இருக்கும் குபேரன் சிலையை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |