110 வயதிலும் கெத்து காட்டும் முதியவர்...ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசை காரணமாக தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட் சமீபத்தில் தனது 110-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவர் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான ரகசியம் குறித்து இவர் பகிர்ந்துள்ள விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இத்தனை வயதை கடந்த போதிலும் மூட்டு வலிகள் தவிர்த்து வேறு எந்த ஆரோக்கிய பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வின்சென்ட் டிரான்ஸ்ஃபீல்ட் யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்து வருகின்றார்.
தனக்கு தானே சமையல் செய்து கொண்டு தனது மூன்று மாடி வீட்டையும் சிறப்பாகவும் சுத்தமாகவும் பாராமரிப்பது மட்டுமன்றி தனது காரையும் ஓட்டும் ஆற்றவை கொண்டுள்ளார்.
20 வருடங்களாக புகைப்பழக்கத்தையும் கொண்டிருக்கும் இவர் 70 வயது வரை கடுமையாக உழைத்திருந்தாலும் தன்னுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
இவரின் ஆரோக்கியத்தின் ரகசியம் ஹம்பர்கர், பால் சாக்லேட், இத்தாலிய உணவுகள், எப்போதாவது பீர், தினமும் ஒரு கப் காஃபி என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நடைபயிற்சி செல்பவர்களை பார்த்து, எதற்கு இப்படி ஓடுகிறார்கள்? என வின்சென்ட் அடிக்கடி சிரிப்பதாக அவருடைய கொள்ளு பேத்தி லிஸ்டா தெரிவித்துள்ளார்.
இவர் தன்னுடைய நீண்ட ஆயுளுக்கு அதிர்ஷ்டமும் பாலும், எனக்கு பிடித்த வேலையை செய்ததும் தான் காரணம் என தெரிவிக்கின்றார்.
வின்சென்ட் தந்தையாகவும், மூன்று பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் ஏழு பேரக்குழந்தைகளுக்கு கொள்ளு தாத்தாவாகவும் இருக்கின்றபோதும் இன்னும் இளமையில் இருந்ததை போன்றே வாழ்ந்து வருகின்றார்.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, 15 வயதில் பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தாகவும் அதில் பணியாற்றிய 5 வருடங்கள் தனது வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்தாகவும் குறிப்பிடுகின்றார்.
தினமும் அவர் குடிக்கும் பசும் பாலில் சுவைக்காகவும் வைட்டமின் சத்துக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் ஓவல்டின் பவுடரை கலந்து குடிப்பதாகவும் அதனை அவர் தவிர்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்ளூர் தீயணைப்பு நிலையத்தில் சுமார் 80 வருடங்களுக்கும் மேலாக தன்னர்வலராக பணிபுரிந்தமையே அவரின் நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கிய காரணம் என குறிப்பிடும் இவர் இங்குதான் அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |