வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் மணி பிளாண்டை வளர்ப்பது எப்படி?
உங்களது வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் செடி “மணி பிளாண்ட்”.
என்னதான் லட்சங்கள் செலவழித்து வீடு கட்டினாலும் வாஸ்து சாஸ்திரப்படி சில விடயங்களை கையாண்டால் பணம் கொழிக்கும், வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்.
அந்த வகையில் பலரின் முதல் தேர்வாக இருப்பது மணி பிளாண்ட் செடிகள்.
இந்த பதிவில் மணி பிளாண்ட் செடிகளை வீட்டிலேயே எளிதாக வளர்க்கும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
நன்மைகள்
- மணி பிளாண்ட் அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வரும்.
- காற்றை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு.
- மன அழுத்தத்தை குறைக்கும்.
- நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி குடும்பத்தில் அமைதியை நிலைக்க வைக்கும்.
வீட்டில் வளர்ப்பது எப்படி?
மணி பிளாண்டை வளர்ப்பது முன், அதற்கான பானையை முதலில் தேர்வு செய்ய வேண்டும், நீங்கள் வளர்க்க விரும்பும் மணி பிளாண்டுக்கு ஏற்றவாறு அதன் அளவு இருப்பது முக்கியம்.
குறிப்பாக மணி பிளாண்ட் செடி தரையில் படர்ந்து வளராத அளவுக்கு அதன் அளவு இருக்க வேண்டும்.
மண், செராமிக் அல்லது பிளாஸ்டிக்கில் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக மண், மணி பிளாண்ட் வளர்வதற்கான மண்ணை தேர்வு செய்து கொள்ளவும், பெரு நகரங்களில் கடைகளில் கூட மண் கிடைக்கிறது.
வெயில், மழை, பனி என எந்தவொரு காலநிலையிலும் மணி பிளாண்ட் வளரக்கூடியது.
* முதலில் அடியில் ஓட்டைகள் இருப்பது போன்ற பானையை எடுத்துக் கொண்டு மண்ணை நிரப்பவும்.
* அடுத்ததாக மணி பிளாண்டை நட்டு வைத்த பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
* மணி பிளாண்டுக்கு பக்கத்தில் மரக்குச்சியை நட்டுவைத்தால், பிளாண்ட் வளர ஏதுவாக இருக்கும்.
* தொடர்ந்து 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
மணி பிளாண்ட் மஞ்சள் நிறத்தில் மாறினால் தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம், வேர்கள் அழுக நேரிடலாம்.
செடிகள் வளர்வதற்கு செயற்கையாக உரம் எதுவும் தேவையில்லை, வீட்டிலேயே டீ தூள், காபி தூள் மற்றும் முட்டை ஓட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட உரங்களை பயன்படுத்தலாம்.
அவ்வப்போது காய்ந்து போன, மஞ்சள் நிறத்தில் மற்றும் இறந்து போன இலைகளை வெட்டி விடுங்கள், ஏனெனில் இது எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும்.