காதலனுடன் அடிக்கடி தனிமையில் இருந்த 20 வயது பெண்: பின்பு அரங்கேறிய துயரம்
காதலியுடன் தனிமையில் இருந்த புகைப்படத்தினை வைத்து மிரட்டி, தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய காதலனையும், நண்பர்களையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத்தை சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட பெண், நான்கு மாதங்களுக்கு முன்பு ஷதாப் என்ற ஒரு இளைஞரை காதலித்து வந்ததுடன், இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
அப்பொழுது பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்த நிலையில், நண்பர்கள் குறித்த நபரின் காதலி மீது ஆசைப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த புகைப்படத்தினை வைத்து காதலனின் நண்பர்கள் மிரட்ட ஆரம்பித்துள்ளனர். தங்களுடன் தனிமையில் இருக்க வேண்டும் அல்லது 50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
அவ்வாறு இல்லையெனில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் காணொளியை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் வேதனையடைந்த அப்பெண் கடந்த செவ்வாய்கிழமை பாலம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவரது இடுப்பெலும்பு முறிந்து கால்கள் செயல் இழந்துள்ளது.
இதுகுறித்து பொலிசாரின் விசாரணை செய்ததும், பெண் அனைத்து உண்மையினையும் கூறியுள்ளார். பின்பு பொலிசார் ஷதாப் மற்றும் அவரது நண்பர்களான ஆரிஃப், சதாம், ரஷீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதுடன், தீவிரமாக தேடியும் வருகின்றனர்.