வாழ்க்கை முழுவதும் செல்வம் செழிக்கணுமா? அப்போ குளிக்கும் நீரில் இதை கலந்தால் போதும்
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனும் சிறந்த ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் எவ்வளவு முயற்சித்தாலும் பெரும்பாலானவர்கள் வாழ்வில் பணப்பிரச்சினை மற்றும் மன அமைதியின்மை போன்ற பிரச்சினைகள் இருந்துக்கொண்டே இருக்கின்றது.
பணத் தட்டுப்பாடு வரக்கூடாது என்றால் குளிக்கும் தண்ணீரில் குறிப்பிட்ட சில பொருட்களை போட்டு குளிக்க வேண்டும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
அதனடிப்படையில் செல்வசெழிப்பு மற்றும் மன அமைதி நிலைக்க என்னென்ன பொருட்களை குளிக்கும் போது பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பு எள்
குளிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கருப்பு எள் கலந்து குளித்து வந்தால் சில நாட்களிலேயே நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு குளிப்பதனால் உடலில் புத்துணர்வு அதிகரிக்கும். குறிப்பிட்ட நாட்களுக்கு இவ்வாறு தொடர்ந்து செய்துவர வாழ்வில் பணத்துக்கு பஞ்சமே ஏற்படாது.
வாசனை திரவியங்கள்
செல்வங்களின் அதிபதியான சுக்கிரனின் ஆதிக்கம் ஒருவருடைய வாழ்வில் இருந்தால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் நிச்சயம் இருக்கும். சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் குளிக்கும் தண்ணீரில் சந்தனம் போன்ற வாசனை உள்ள பொருட்களை கலந்து குளிப்பது சிறந்த பலனை கொடுக்கும். இவ்வாறு செய்வதனால் பணப்பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.
மஞ்சள்
வாழ்வில் செல்வம் செழிக்க வேண்டுமென்றால் குருவின் ஆசீர்வாதம் இன்றியமையாதது. குருவிற்கு பிடித்த நிறம் மஞ்சள் என்பதால் குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சளைச் சேர்த்து குளிப்பதனால் குருவின் ஆசீ்ர்வாதம் கிடைக்கும். அதனால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் பணத்துக்கு தட்டுபாடு இருக்காது.
நெய்
குளிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குளித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் மனம் அமைதி கிடைப்பதுடன் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
பால்
சாஸ்திரங்களின் அடிப்படையில் குளிக்கும் தண்ணீரில் பாலை கலந்து குளித்தால், கெட்ட நேரங்கள் நீக்கப்படுகிறது. இப்படி குளிப்பதால் அதிர்ஷ்டம் கிடைப்பதுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
உப்பு
குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குளித்தால், மன அழுத்தம் நீங்குவதுடன் நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கின்றது. இதனால் முன்னேற்றத்துக்கான அனைத்து பாதைகளும் திறக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |