அசிங்கப்படுத்தும் தொப்பையை ஒழிக்கணுமா? இந்த பழங்கள் தான் சிறந்த தெரிவு
பொதுவாகவே அனைவருக்கும் கட்டுக்கோப்பாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை.
ஆனால் அதிகரித்த வேலைப்பளு, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் நம்மால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
உடற்பயிற்சியில் ஈடுப்பட நேரமில்லாதவர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்சியாக வேலை செய்பவர்களுக்கம் தொப்பை பிரச்சினை வராமல் இருக்க வாய்ப்பே இல்லை.
இந்த பிரச்சினைக்கு குறிப்பிட்ட சில பழங்களை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த தீர்வு கொடுக்கும். எந்த பழங்கள் தொப்பை பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், புரதம், கால்சியம் மற்றும் ஏனைய ஊட்ச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. பப்பாளியை தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தொப்பை விரைவில் குறைய ஆரம்பிக்கும். இது சரும ஆரோக்கியத்துக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
பேரிக்காய்
பேரிக்காயில் (Pears) அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிற்றில் நிரம்பிய உணர்வை கொடுக்கும். இதனால் அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியும். உடல் எடையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் செரிமான அமைப்பை சீர்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. தினசரி வெறும் வயிற்றில் வாழைப்பபழம் சாப்பிட்டு வந்தால் இதில் காணப்படும் நார்ச்சத்து காரணமாக மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும். மேலும் தொப்பையை விரைவில் குறைக்க உதவும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கொழுப்பை விரைவில் கரைக்க உதவும். தொப்பை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கொடுக்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சரும பொலிவுக்கு துணைப்புரிகின்றது.
திராட்சை
திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. திராட்சை சாப்பிடுவது அதிக நேரம் பசியை கட்டுப்படுவும் உதவுகின்றது. அதனால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். இது மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு தீர்வு கொடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |