நடைபயிற்சியின் போது திடீரென சுருண்டு விழுந்த எஜமானி... வளர்ப்பு நாய் செய்த காரியத்தைப் பாருங்க
கனடாவில் தன்னுடன் நடைபயிற்சி வந்த எஜமானி திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தவரை தனது சாமர்த்தியத்தால் நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது. கனடாவில் ஓட்டாவா பகுதியைச் சேர்ந்த ஹேலி மூர் என்ற பெண் கடந்த 16ம் திகதி தனது நாய் Clover-உடன் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்பொழுது திடீரென வலிப்பு ஏற்பட்டு ஹேலி மூர் சுருண்டு விழுந்தார்.
உடனே நாய் நொடிப்பொழுதில் அவரது உயிரைக் காப்பாற்ற படாதபாடுபட்டுள்ளது. இறுதியில் எஜமானியைக் காப்பாற்ற எதிரே வந்த வாகனத்தினை சாலையின் நடுவே சென்று நிறுத்தி தனது எஜமானியின் உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியாக காணொளியினை இங்கு காணலாம்.
ஹேலிக்கு திடீரென்று எப்படி வலிப்பு நோய் வந்தது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள அவரது பெற்றோர், ஆனால் செல்ல நாய் Clover-ன் செயல் தங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.