உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க
பொதுவாக அநேகமான வீடுகளில் வீட்டிற்கு உள்ளே சில செடிகள் வளர்ப்பார்கள். அப்படி பிரபலமானது செடி தான் மணி பிளான்ட்.
வீட்டினது அழகை இரட்டிப்பாக்குவதற்கு வளர்க்கப்படும் இந்த செடியை சிலர் அதிர்ஷ்டத்திற்காகவும் வளர்க்கிறார்கள். நம்பிக்கையை தரும் மணி பிளான்ட் செடியானது, மற்ற செடிகளை வளர்ப்பதிலும் பார்க்க எளிது தான்.
மணி பிளான்ட் சின்னஞ்சிறு தண்டு ஒன்றை வெட்டி, எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் நாட்டி, தண்ணீர் ஊற்றி வந்தால் காற்றினால் கிடைக்கும் ஈர்ப்பதனை உறிஞ்சி செழிப்பாக வளரும்.
பெரிய அளவில் படர்ந்து வளரக்கூடிய இந்த தாவரத்தை தண்ணீர் ஊற்றாமலும் வளர்க்கலாம். பார்ப்பதற்கு பசுமையாக, அழகாக இருக்கும் மணி பிளான்ட்டை சில தவறாக பராமரிப்பார்கள். அது வீட்டிற்கு அதிர்ஷ்டம் வருவதை தடுக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அப்படியாயின், மணி பிளான்ட் வளர்க்கும் பொழுது என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மணி பிளான்ட் பராமரிப்பு டிப்ஸ்
1. மணி பிளான்ட் செடி வளர்ப்பவர்கள் அதற்கு வழக்கமான செடியை போன்று அதிகமான தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் விட்டால் வேர்கள் அழுகி வாய்ப்பு உள்ளது.
2. காற்றில் உள்ள ஈரப்பதனை உறிஞ்சி வளரும் மணி பிளான்ட்டிற்கு தண்ணீர் ஊற்றாமலும் இருக்கக் கூடாது. போதுமான அளவு தண்ணீர் விடுவது கட்டாயம்.
3. நேரடி சூரிய ஒளி படும் இடங்களில் மணி பிளான்ட் வைப்பது குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி மீறி வைத்து வளர்க்கும் பட்சத்தில் செடி கருகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.
4. வறண்ட காலநிலை இருக்கும் பொழுது மணி பிளான்ட் அழிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, வீட்டிற்குள் வளர்ப்பது சிறந்தது.
5. பூச்சிகளின் தாக்குதலால் செடி அழிந்து போக வாய்ப்பு உள்ளது. அவ்வப்போது பூச்சி தாக்குதல் உள்ளதா? என்பதை சரிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
6. செடியை உரம் போடாமல் பராமரிக்க முடியாது. அதனால் நல்ல வளர்ச்சிக்கு தடையாகவும் அமையும்.
7. சேதமடைந்த மற்றும் பழுத்த இலைகள் இருந்தால் ஆரம்பத்திலேயே அதனை அகற்ற வேண்டும். இது ஆரோக்கியமான புதிய இலைகள் வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |