50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
50 வயதிலும் 20 வயது பெண் போன்று தோற்றமளிக்கும் சிம்ரனை போன்று நாமும் 50 வயதில் ஜொலிக்க வேண்டும் என்றால் சில கட்டுபாடுகளை உணவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் சிம்ரன்.
இவர், திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தாலும், சினிமாவிற்குள் கம்பேக் கொடுக்கும் பொழுது 20 வயதில் எப்படி இருந்தாரோ அதே அழகில் இருந்தார்.
சிம்ரன் அவருடைய கட்டுடலை பேணுவதற்காக கட்டுப்பாடுடன் கூடிய சமச்சீர் உணவை பின்பற்றி வருகிறார் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதாவது எளிதில் செரிமானமாகக் கூடிய மீன், முட்டை, நார்ச்சத்துள்ள காய்கறிகள், தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுதல்.
மேலும், வயதிற்கேற்ற ஊட்டச்சத்துகளை தெரிவு செய்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
50 வயதிலும் குறையாத அழகு எப்படி?
இது போன்று 50 வயதிலும் இளமையாக ஜொலிக்க என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
50 வயதிலும் உங்களை பார்த்து உங்கள் பிள்ளை பொறாமை பட வேண்டும் என்றால் முதலில் உங்களின் உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். உணவை சரியாக கையாள தெரிந்தவர்கள் வாழ்க்கை பல வேலைகளை செய்து விடுகிறார்கள்.
வயது வரவர தோலில் சுருக்கம் கரும்புள்ளிகள், மென்மை குறைதல் போன்ற அறிகுறிகளை பார்க்கலாம். இதனை இல்லாமல் செய்ய முடியாது, ஆனால் வரும் நாட்களை தள்ளிப்போடலாம். வெளிப்புற பராமரிப்பை விட, உள் ஊட்டச்சத்துக்கள் நிலையான இளமையை தருகிறது.
உங்களுடைய சருமத்திற்கு தேவையான கொல்லாஜன் (collagen), ஆன்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு (healthy fats) போன்றன இளமையாகவே வைத்திருக்கும்.
அற்புதம் செய்யும் உணவுகள்
1. இளமையாகவே வாழ நினைப்பவர்கள் அடிக்கடி அவகேடோ சாப்பிடுவது நல்லது. ஏனெனின் அவகேடோவில் உள்ள நல்ல கொழுப்புகள் மற்றும் Vitamin E, C சத்துக்கள் கொல்லாஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. அவகேடோ வைத்து சாலட், ஸ்மூத்தி, சாண்ட்விச் செய்யலாம்.
2. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகை என்றால் அது சால்மன் மீன் தான். இது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. வாரத்திற்கு 2 முறை சரி சாப்பிடலாம்.
3. வழக்கமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் UV நச்சு தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் லைசோபீன் உள்ளது. ஜூஸ் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.