குழந்தைகளின் உயிரை குடித்த இருமல் மருந்து.. உஷாரா இருங்க- மருத்துவர் எச்சரிக்கை!
இந்தியா- தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமொன்று தயாரித்த இருமல் மருந்தை குடித்து சுமாராக 20 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
பருவ கால மாற்றங்களினால் ஏற்படும் காய்ச்சல், இருமலை சரிச் செய்வதற்காக கோல்ட் டிரிஃப் இருமல் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மனதில் பெரும் இடியாக பதிந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இருமல் மருந்து தொடர்பான வழிகாட்டல்களும், நெறிமுறைகளும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் பரிந்துரைக்க வேணடாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோல்ட் டிரிஃப் விஷமாக மாறியதற்கான காரணத்தை தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உயிரிழப்புக்கான காரணம்
இருமலை சரிச் செய்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கோல்ட் டிரிஃப்பில் 48.6% வரை டை-எத்தலின் கிளைக்கால் இருந்துள்ளது. இது குழந்தைகளின் சிறுநீரகத்தை பாதித்து, செயலிழக்க செய்துள்ளது. இதன் காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நச்சு ரசாயன தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு இதற்கு முன்னர் கடந்த 2023 ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெஸ்கிஸ்தானில் ஏற்பட்டது.
அந்த தாக்கத்தினால் சுமாராக 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், கடந்த டிசம்பர் 2019, கடந்த ஜனவரி 2020-ல் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 12 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவர் எச்சரிக்கை
இது குறித்து மருத்துவர் ஒருவர் பேசுகையில், “குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். மருந்து கடைகளில் தானாக மருந்துகளை வாங்கிக் கொடுப்பதை நிறுத்த வேண்டும். முதலில் குழந்தைகளுக்கு ஏன் இருமல் வருகிறது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு அலர்ஜியா, ஆஸ்துமா, சாதாரண சளி காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் இருமல் ஏற்படலாம்.
எந்தவொரு சிரப்பும் மூடியை திறக்கும் வரை தான் காலாவதியாகும் தேதி இருக்கும். ஒருமுறை சிரப் திறந்து விட்டால் பழுதாக ஆரம்பித்து விடும். அடுத்த 2 -3 நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு சிரப்பை குடிக்கலாம்.
அதிகமான காலம் வைத்திருந்து பயன்படுத்தும் பொழுது நச்சுத்தன்மையாக மாற வாய்ப்பு உள்ளது. நமது சமூகத்தில் பெற்றோர்கள் இருமல் மருந்தை ஒருமுறை பயன்படுத்தி விட்டு, அடுத்த முறை பயன்படுத்துவதற்காக களஞ்சியப்படுத்தி வைப்பார்கள். இதுவே குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும் தவறாகும்..” என பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |